AMAZON SHOP

Sunday, September 5, 2010

STHALA VARALAARU - 3

   
  LORD SIVA
 ஸ்தல வரலாறு- 2 
             
        முதலில் நம் கண்ணுக்கு புலப்படுவது மயில் மீதமர்ந்த முருகன் புடைப்பு சிற்பம் அதன் மேல் சிறியகல் மண்டபம் அதன் கீழ் கல் ஜன்னல், தெற்கு நோக்கிய நிலையில் ஞானமளிக்கும் குருவாக காட்சி தருகிறார்.சுற்றுப்புரத்தே நாம் காண்பது நடனமாடும் நர்தன விநாயகரை அடுத்து காட்சி தருவோர் தென்முக கடவுளாம் தகிஷினாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்துள்ள தட்சினாமூர்த்தி அமைப்பு மிகவும் பிரமிப்பூட்டுவதாக உள்ளது. சனகாதி முனிவர்கள் இருபுறமும் அமர்ந்திருக்க ஞ்னகுருவாம் குருபகவான் தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.


   கிழக்கு நோக்கிய நிருதிவினாயகராம் கற்பக விநாயகர் வள்ளி , தெய்வானை சமேத சுப்பிரமணியர் லிங்கோத்பவர் பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.         


  லிங்கோத்பவர்: சிவனின் அடிமுடி காண இயலாத அண்ணலின் சரித்திரத்தை விளக்கும் வகையில் பிரம்மா அன்னப்பறவையாக சிவனின் முடி காண மேல்நோக்கி சென்று தோல்வியுற்று திரும்பியதையும், விஷ்ணுபகவான் சிவனின் அடிகாண்பதற்காக வராக ரூபம் எடுத்து கீழ் நோக்கி சென்று தோல்வி அடைந்ததையும் தத்ரூபமாக விளக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.


தொடரும்


 DHINAMALAR- NEWS
      
Yoga:the Sivananda Yoga Video [VHS]



   









Sunday, August 29, 2010

STHALA VARALAARU - 2

                       


     LORD SIVA 
         ஸ்தல வரலாறு- 2  
        
அக்கவேரி நதியில் தெற்கே அமைந்த பல சிவாலயங்களில் சிறுகமணி அ / மி கற்பகாம்பிகை உடனுறை பக்த வத்சலேஸ்வரர் சிவன்கோவில் மிகவும் பழமையானதாகும்.இத்திருக்கோயில் திருச்சி,கரூர் நெடுஞ்சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 22  கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது. கணக்கில் அடங்கா வேத மந்திர, சாஸ்திர விற்பன்னர்களாம் பக்த சிரோன்மணிகள் வசித்து வந்த இடமாதலால் சிரோன்மணி என்றழைக்கப்பட்டு அதுவே சிறுகமணி என்று கூறப்படுகிறது.


நெல்,வாழை கரும்பு,தென்னை என எங்கும் பசுமை சூழ்ந்த அழகு மிளிரும் கிராமம் சிறுகமணி ஆகும்.

இத்திருக்கோயில் கி.பி. 11  ம் நூற்றாண்டு புராதனமாக அறியப்படுகிறது.கோயிலில் நுழைந்தவுடன் நலம் தரும் நந்தியம் பெருமான் நம்மை வரவேற்பதுபோல் காட்சி தருகிறார்.மூலவர் பக்தவத்சலேஸ்வரர் சுயம்புலிங்கம்.  
அன்னை கற்பகாம்பிகை நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.நான்கு திருக்கரங்களை உடையவள்.மேலிரு கரங்களிலும் பத்மம் எனும் தாமரையை தாங்கியவராக உள்ளார்.கீழிரு கரங்களில் இடக்கரம் தன் பாதத்தை பற்றிக் கொள்ள காண்பித்தும், வலக்கரம் அபயமளிப்போம் வந்து சேர் என்பதாகவும் அமைந்துள்ளது.அம்பாள் பீட அமைப்பு சிற்ப கலை நுணுக்கங்களில் மிக தேர்ச்சி பெற்ற சிற்பிகளால் உருவாக்கப்பட்ட திருகுபீட அமைப்பாகும்.இவ்வமைப்பு அரிதிலும் அரிதாக உணரப்படுகிறது.


தொடரும் 
   







  


  


   


     

Saturday, August 28, 2010

STHALA VARALAARU - 1

        
SIRUGAMANI CAUVERY RIVER BANK
                     



  கங்கையிற் புனிதமாய் காவிரி என்ற காவிரிக்கு 
உயர்வளிக்கப்பட்டுள்ளது. 
காவேரி,காவிரி என்ற இரு சொற்களும் பொருத்தமான ஒன்றே. கா: பாவநீக்கம். வே:விரும்பியதை தருபவள். ரி:மோட்சமளிப்பவள் சகல பாவங்களையும் நீக்கி விரும்பியதை வழங்கி மோட்சமளிப்பவள் என்று பொருள்படும். 


 கா:சோலை,வி:விசை அல்லது சக்தி ரி :பரந்த, விரிந்த, சக்தியுடன் அல்லது விசையுடன் சோலை போல் அழகோடு கூடிய விரிந்து வரும் காவிரி என்பது விளக்கமாகும். 


 ஒருவர் தன் பாவங்களை முழுவதும் போக்கிக் கொள்ள கங்கையில் 3  தினங்கள்  தங்கி குளிக்க வேண்டும்.


    யமுனையிலோ 5 தினங்கள் தங்கி குளிக்க வேண்டும். ஆனால் காவிரி பாயும் தேசத்தில் வசித்தாலே முக்தி. காவிரி கரையில் வசித்தாலோ அதனினினும்  சீக்கிரம்  முக்தி. காவிரியில் பட்ட காற்றை ஸ்வாசிதலோ கோடானு கோடி புண்ணியம்.


   லட்சோப் லட்ச மக்கள் குளித்த காரணத்தால் தன் மீது படிந்துள்ள பாவங்களை போக்கிக் கொள்ள கங்கையானவள் காவேரி ஸ்நானனம் எனும் ஐப்பசி 1  அதிகாலை காவிரியில் வந்து நீராடுவதாக ஐதீகம்


 தொடரும் 




 








  











Tuesday, August 24, 2010

vinayagar thuthi

     கற்பக விநாயகர் துதி:-
    மூத்தோன் தன்பின்னை காப்போன் என்றென்றும் 
     மலை என நிற்கும் இடரனைத்தும் நீக்கும் எம் 
    தலைவ ! அருள்புரி! ஆதரி கற்பக விநாயகனே...


   கற்பகாமிகை துதி:- 
  கற்பகமே! கனியமுதே கலங்கரை விளக்கமதே 
  அற்பமான எனை இனிதேற்றி கரை காணவைத்த 
  பொற்பதமே போன்னணியே பூ தலைத்து புகழ்மணியே 
  கற்றுணரும் கல்வியதை பெரிதுணர வைப்பாய் நீயே