NEWS FROM WIKIMAPIA.ORG CLICK BELOW
THERE IS AN ANCIENT SIVAN TEMPLE IN SIRUGAMANI VILLAGE,TIRUCHIRAPALLI.THIS TEMPLE WAS RENOVATED ON SUNDAY 22-8-2010, THIS TEMPLE IS CONSIDERED TO BE A PARIGARASTHALAM.THIS BLOG GIVES SOME INFO ABOUT THIS TEMPLE.
AMAZON SHOP
Labels
- INDIAN TEMPLES (1)
- KUMBAABISHEGAM (1)
- KUMBABISHEKAM VIDEO (1)
- NAMASIVAYA MANDHIRAM (5)
- sirugamani (1)
- STHALA MAGIMAI (21)
- STHALA VARALARU (10)
- VINAYAGAR THUTHI (1)
Thursday, January 13, 2011
Karpagambigai UDANURAI Bakthavathaleswara swamy Temple,Sirugamani
Tuesday, January 11, 2011
Sunday, January 9, 2011
STHALA MAGIMAI-2
![]() |
| சிவ பெருமான் |
ஸ்தல மகிமை-2
அவர் அருளிய முறைப்படி அவ்விடத்திலேயே கண்களை மூடியபடி தேவியை த்யானித்த அர்ஜுனன் தன் கண்களை திறந்து பார்த்தபோது, தேரின் மேல் ஸ்ரிக்ரிஷ்ணருக்கு பதிலாக ஆங்கே துர்க்கா தேவி காட்சி அளித்தணல்!
ஸ்ரீக்ரிஷ்ணர் அருளிய 'ஜயோ பவது மே நித்யம்' என்ற மந்திரத்தை ஓதியவாறே, 18 முறை சாஷ்டாங்கமாக துர்க்கா தேவியை வீழ்ந்து வணங்க, அர்ஜுனனின் மனத்தளர்ச்சி முற்றிலுமாக முற்றிலுமாக அகன்றது. புத்துணர்ச்சி பெற்றவனாய் போரிடத் தயாரானான்.
தீயோரை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட வேண்டி ஸ்ரீக்ரிஷ்ணராய் அவதரித்தது ஸ்ரீமகாவிஷ்ணுதானே! அந்த தெய்வாம்சத்தின் ஒரு கூறே விஷ்ணு துர்கையாய்க் காட்சி தந்து, அர்ஜுனனின் மனத் தளர்வை போக்கியது. குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு தேரின் மேல் காட்சி தந்த தேவியே சிருகமணித் திருத்தலத்தில் கோஷ்ட மூர்த்தியாய் எழுந்தருளி அருள்பாலிக்கின்றால்.
'என்ன முடிவெடுப்பது?' என மனம் தடுமாறும் இக்கட்டான சூழ்நிலைகள் அனைவர் வாழ்விலும் ஏற்படுவதுண்டு. அத்தகையோர் சிறுகமணி திருத்தலம் வந்து, கிஷ்டமூர்த்தியாய் அருளும் துர்கையைத் தக்க அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு, ஸ்ரீகிருஷ்ணர் அருளிய மந்திரத்தை ஓதியவாறே குறைந்தது 18 முறையாவது சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி வந்தால், தெளிந்த, தீர்க்கமான முடிவை எடுக்கும் மனத்திட்பம் கிட்டும்.
ஓம் ஸ்ரீகுருவே சரணம் !!
சுபம்
Sunday, January 2, 2011
STHALA MAGIMAI -1
![]() |
| LORD SIVA |
இதுவரை இந்த சிறுகமணி ஸ்தலத்தின் வரலாற்றை பார்த்தோம். இனி இந்த ஸ்தலத்தின் மகிமைகளைக் காண்போம்.
தன் சாபம் நீங்கபெற்றதால் இந்திரன் ஆனந்த மிகுதி கொண்டு இந்த ஸ்தலத்து இறைவனை 'பகதவத்சலா' என அழைத்தால் அதையே திருநாமமாக கொண்டு ஈசன் இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
பல்வேறு சிறப்பு அம்சங்களைத் தன்னுள் தாங்கி நிற்கும் இந்த ஆலயத்தைப்பற்றி பலர் அறியாது இருக்கின்றனர். உதாரணமாக, இங்கு கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளியுள்ள துர்க்கா தேவியின் மகிமையை பார்க்கலாம்.
குருஷேத்திர யுத்தத்தின் போது 'தன் உற்றார் உறவினரோடு யுத்தம் செய்வதா என்ற மனக் குழப்பம் அர்ஜுனனுக்கு ஏற்பட்டதையும், அதைப் போக்க ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா பகவத் கீதையை உபதேசிததையும் நாமறிவோம். அதற்குப்பின் நடந்த சம்பவங்களை இருடிகளின் மகாபாரதத்தில் மட்டுமே காணலாம்.
கீதோபதேசம் பெற்ற பின்னரும் அர்ஜுனனின் மனத் தளர்ச்சி முற்றிலுமாக நீங்கவில்லை. ஆகவே, ஸ்ரீகிருஷ்ணர் துக்க நிவாரணியாகத் திகழும் துர்க்கா தேவியை வேண்டும்படி அர்ஜுனனைப் பணிந்தார்.
தொடரும்
Subscribe to:
Posts (Atom)

