AMAZON SHOP

Sunday, August 22, 2010

kumbaabishekam

    
     THE KUMBAABISHEKAM OF THE 
     ARULMIGU KARPAGAAMBIGAI                 SAMEDHA
    SRI BAKTHAVATHSALESWARAR 
    THIRUKKOIL 
     SIRUGAMANI GRAMAM
     THIRUVARANGAM VATTAM
      THIRUCHI MAAVATTAM
    TOOK PLACE 
    ON 22-08-2010,SUNDAY, 7.40 AM
    MORE DETAILS FOLLOW

Sunday, January 31, 2010

NAMASIVAYA MANDHIRAM - 5


 சிவ பெருமான் 
   நமசிவாய  மந்திரம்-5 


       இவ்வாறு சைவசமய ஆசிரியர் பலரும் உலகுக்கு உபதேசிப்பது பஞ்சாட்சர மந்திரம் ஒன்றையே ஆகும். 

  "சிவசிவ என்கிலர் தீவினையாளர் 
    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
     சிவசிவ என்றிடத் தேவருமாவர் 
     சிவசிவ என்னச் சிவகதிதானே"

   என்பது திருமந்திரம். இது மகாகாரண  பஞ்சாட்சரம் எனப்படும்.

    திருவைந்தெழுத்து ஒதுபவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்றாற்போல் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

     1."நம சிவாய" - ஸ்தூல பஞ்சாட்சரம் 
     2. "சிவாய நம" - சூக்கும பஞ்சாட்சரம் 
     3. "சிவாய சிவ" காரண பஞ்சாட்சரம் 
     4. "சிவ" - மகா காரண பஞ்சாட்சரம் 
     5. "சிவாய சிவ" - மகா மனு  

   இதில் முதல் இரண்டுமே ந்ஞானநூல்களிலும் திருமுறைகளிலும் அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளன. பிற மூன்றும் மிகவும் பக்குவம் பெற்றவர்கள் குருவருள் வழி நின்று உணர்த்தி அனுபவிக்கக்கூடியது.

தொடரும் 

    











    












Sunday, January 24, 2010

NAMASIVAYA MANDHIRAM -4


 சிவ பெருமான்  
  நமசிவாய  மந்திரம்-4    

                    ஞானசம்பந்தர் 

  "வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்த கூன்று 
    அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே"

  "செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு 
    அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே"

 "இம்மைவினை அடர்தெய்து போழ்கினும் 
   அம்மையினுந் துணை அஞ்செழுத்துமே"

   என்று உபதேசித்துள்ளார்.

         அப்பர் ஸ்வாமிகள் 

    "கற்றுணைப் பூட்டி - ஓர் கடலிற் பாய்ச்சினும் 
      நற்றுணை யாவது நமசிவாயவே"

   "நாவினுக் கருங்கலம்  நமசிவாயவே" 

   "விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்விழல் 
     உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் 
     பண்ணிய உலகில் பயின்ற பாவத்தை 
     நண்ணிநின் றறுப்பது நமசிவாயவே" 

    "நமசிவாயவே ஞானமும் கல்வியும் 
       நமசிவாயவே நானறி விசையும் 
      நமசிவாயவே நாதவின் றேத்துமே 
     நமசிவாயவே நன்னெறி காட்டுமே"

   இவ்வாறு சைவசமய ஆசாரியர் பலரும் உலகுக்கு உபதேசிப்பது பஞ்சாட்சர மந்திரம் ஒன்றையே ஆகும்.

தொடரும் 

      












   














     

Sunday, January 17, 2010

NAMASIVAYA MANDHIRAM-3


 சிவ பெருமான்  
நமசிவாய  மந்திரம்-3

                  இம்மந்திரத்தை இடையறாது மனதில் உச்சரிப்பவர்கள் சிவ சொரூபம் அடைகின்றனர். 

    சிவாய நம என்றும் மந்திரத்தை எல்லோரும் பொதுவாக த்யாநிக்கின்றனர்.  

     திருவைந்தெழுத்தை உச்சரிப்பதற்கு ப்ராரத்தவினை தாக்காதிருக்கவேண்டும். தாக்குமாயின் உச்சரிக்க முடியாது. 

   "சிவ" என்பது மங்களகரமானது என்பதாம்.

      சிவ என்பதை சிவா என்று நீட்டினால் அருவ சக்தியாகிய அம்பிகையைக் குறிக்கும்.  

    'சிவாய நம' என்னும் மந்திரமே பஞ்சாட்சரம்,பஞ்சாக்கரம்,திருவைந்தெழுத்து எனப்படுகிறது. 

   சிவவாக்கியர் தன் நூல் தொடங்கும் காப்புச் செய்யுளில் கூறும் மந்திரம் "நமசிவாய" என்பது "அரியதோர் நமசிவாயம் ஆதியந்தம் ஆனதும ஆறிரண்டுநூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்" என்றார்.

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் "நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே" என்று ஓர் அரிய திருப்பதிகத்தை அருளிச் செய்தார் .

    "சிவாய நம" என்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி" என்று நாவுக்கரசர் இறைவனைக் கேட்கிறார்.

  மாணிக்கவாசக ஸ்வாமிகள் தமது திருவாசகத்தில் "நமசிவாய வாழ்க" என்று தொடங்கியுள்ளார்.மேலும் "நானேயோ தவம் செய்தேன் சிவாய நம" எனப்பெற்றேன் என்கிறார்.

தொடரும்