AMAZON SHOP

Sunday, October 10, 2010

STHALA VARALAARU - 6


     
          
                                       LORD SIVA 
                          

ஸ்தல வரலாறு- 6 
   

        பக்த+வத்சலம்  = பக்தவத்சலம் ஆயிற்று. தன் குழந்தைகளை காப்பது போல் அரவணைத்து காப்பவர் என்று பொருள்.எனவே பக்தவத்சலேஸ்வறரை   தரிசித்தல் என்பது வானளாவிய உயர்ந்த செயலாகும். வார்த்தையில் வர்ணிக்க இயலாத வளங்களை வாரி வாரி வழங்கும் தலம் சிறுகமணி ஆகும். 


    மாலை வேளை நான்கைந்து சிறுவர்கள் சிவன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டிற்கு இடையூறாக சாந்தம் தவழும் சாது ஒருவர் குறிக்கிட்டு ஒரு சிறுவனை நோக்கி தம்பி குடிக்க தண்ணீர் வேண்டுமே? என வினவுகிறார். அச்சிறுவன் பெரியவருக்கு தண்ணீர் கொடுக்கும் பொருட்டு தன் வீடு நோக்கி செல்கிறான். அப்பெரியவரும் உடன் தொடர்கிறார். ஒரு செம்பு தண்ணீருடன் வீட்டின் வெளியே வந்த சிறுவன் வீட்டு வாயிலில் அப்பெரியவரை காண்கிறான். 


 தண்ணீரை அவர்முன் நீட்ட பெரியவர் பெற்றுக் கொள்கிறார். நீரை பெற்ற பெரியவர் தரையில் அத்தண்ணீரை ஊற்றுகிறார். மண்ணைக் குழைக்கிறார். இருகவளம் வாயில் போட்டு விழுங்கி நீரை பருகுகிறார். செம்பை அச்சிறுவன் கையில் கொடுத்துவிட்டு வந்த வழியே சென்று மறைந்து விடுகிறார்.


தொடரும் 
   
   












     













Sunday, September 26, 2010

STHALA VARALAARU - 5




ஸ்தல வரலாறு- 5
     
   
  நவக்ராகன்களாம் ஒன்பது கிரகங்கள் ஒரு மலர்ந்த தாமரை மலர்மீது தத்தம் நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். அந்த மண்டபம் அகலம் நீளம் கோபுர உயரம் அனைத்தும் ஒன்பதின் கூட்டு தொகையில் அமைக்கப்பட்டது தனி சிறப்பாகும். எனவே அனைத்து கிரகங்களும் சமமாக பாவிக்கப்பட்டு அனைத்து கிரக தோஷ பரிகார தலமாக அமைக்கப்பட்டுள்ளது. 

   சிவன் சன்னதி உள்ளே இடது பக்கம் சிறிய விநாயகர் வலது பக்கம் தண்டபாணியும் அமையப்பெற்றுள்ளது. கோயில் வெளிப்புறம் நுழைவாயிலுக்கு மேற்கில், கிழக்கு நோக்கிய காவல் தெய்வம் ஒன்று கையில் சாட்டையுடன் காட்சி தருகிறார்.

  இத்தல விருட்சம் வில்வ மரமாகும். கற்பக விருட்சம் என்பது தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கடைந்த போது தோன்றிய ஒன்றாகும். அதன் சிறப்பே மனதில் நினைத்த எதையும் நினைத்த உடனேயே வழங்குவதாகும். மனதில் நினைத்த எதையும் உடனே வழங்கும் கற்பக விநாயகர் மற்றும் அவரது தாயார் கற்பகாம்பிகை ஆகிய இருவரும் ஒருங்கே அமர்ந்து அருள் பாலிப்பது மிகமிக அரிதான ஒன்றாகும்.

தொடரும்