AMAZON SHOP

Wednesday, April 20, 2011

STHALA MAGIMAI-7


  சிவ பெருமான்              
                 ஸ்தல மகிமை-7

        தற்போது சமுதாயத்தில் விரைந்து பரவி வரும் இத்தகைய சீர்கேடுகளுக்குப் பிராயச்சித்தம் தர வல்லதே கமணீய சக்திகளாகும். சமுதாயத்தில் காமக் குற்றங்களும்,முறைகேடான பழக்க வழக்கங்களும் பெருகா வண்ணம் காக்க உறுதுணை புரிவதே கமணீய நாதக் கூறுகளாகும். எந்த அளவிற்குச் சமுதாயத்தில் கமணீய சக்திகள் பெருகுகின்றதோ, அந்த அளவிற்கு சமுதாயத்தில் காமக் குற்றங்கள் அகன்று,அமைதிப் பூங்காவாக மலரும் என்பதே சித்தர்கள் நமக்குக் காட்டும் நல்வழியாகும்.

                 மன வளம் பெரும் முறை 

   ஒரு மனிதனின் எதிர்காலம் அவன் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்துதானே அமைகின்றது? சரியான முடிவுகளை எடுக்கும்போது பிரகாசம் அடையும் அவனுடைய எதிர்காலம் தவறான முடிவுகளால் பாதிக்கப்படுகிறதே? அது ஏன்? 


     மனித மூளையில் இயங்கும், நடுச்சூடு வகையைச் சார்ந்த கபால வாயுவே ஒரு மனிதன் சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றது. நமது உள்ளங்கை,மருதாணி,சந்தனம்,எள் போன்ற மூலிகை வகைகள் நடுச் சூடு இயக்கத்தை கொண்டவை.இதனால் தான் சந்தனம் அரைத்தல், உள்ளங்கையில் மருதாணி இடுதல், எள் நீர் வார்த்து தர்ப்பணம் அளித்தல் போன்ற நற்காரியங்கள் நமது மூளைச் செல்களை ஆக்கப்படுத்தி, நமது எதிர்காலத்தை வளமாக்குகின்றன.


தொடரும் 


   


















   





















Sunday, February 6, 2011

STHALA MAGIMAI-6

 சிவ பெருமான் 
    ஸ்தல மகிமை-6 


   ஆனால் ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்ற செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட பானங்களை நாம் ஏற்கும்போது, இந்த பானங்களில் உள்ள 'வெளிச் சூடு' என்னும் தத்துவம் உடலில் உள்ள உள் சூட்டுடன் தொடர்பு கொள்வதால் விரைவில் உடல் உள் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடைந்து, இறுதியில் தங்கள் இயக்க சக்தியையே முழுவதுமாக இழந்து விடுகின்றன.

    அதேபோல,முறையான திருமணத்திற்குப் பின் தம்பதியரிடையே நிகழும் உறவு நிலையானது.அவர்களை நல்ல ஆரோக்கியமான உடல், மனவள நிலையில் வைத்திருப்பதுடன் அவர்களுக்குப் பிறக்கும் சந்ததிகளுக்கும் பரிபூரண ஆரோகியத்தைப் பெற்றுத் தருகிறது.

  ஆனால், சுய இன்பம்,ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவு நிலைகளில் மனிதர்கள் ஈடுபடும்போது, இந்த 'உள் சூடு - உள் சூடு' என்ற பரிமாற்றம் நிகழ்வதால், அவ்வாறு தகாத வழிச் செல்வோரின் உடல் உறுப்புகளும், நரம்புகளும், இரத்தக் குழாய்களும் விரைவில் பழுதடைந்துவிடுகின்றன. பல நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

தொடரும் 

    









    











Sunday, January 30, 2011

STHALA MAGIMAI-5


 சிவ பெருமான் 
  ஸ்தல மகிமை-5

     இருந்தபோதிலும் பீஜாட்சர சக்தியால் மனிதர்களுக்கு கிடைக்கும் பலனை விளக்குவது எளிதானதே.மனித உடலில் உள்ள சூட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதாவது, உல் சூடு, நடுச் சூடு,வெளிசூடு என்று மூன்று விதமான உஷ்ண நிலைகள் ஒவ்வொரு மனித உடல், மன இயக்கத்தைப் பரிபாலனம் செய்கின்றன.


  நாம் ஏற்கும் உணவு,நம்முடன் பழகும் மனிதர்கள் ,நம்மை ஆட்கொள்ளும் என்ன அலைகள் ஆகியவை நம் உடலில் உள்ள அந்தந்த வகை சூட்டுடன் பரிமாற்றம் அல்லது பரிவர்தனை செய்து செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. இந்த விதிக்கேற்ப நிகழச்சிகள் நடைபெறும்போது , நமது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு எதிரான பரிவர்தனை அல்லது தொடர்பு ஏற்படும்போது,பலவித நோய்கள் நம் உடலையும்,உள்ளத்தையும் நிச்சயம் தாக்கும்.


   உதாரணமாக,இளநீர் உள்சூடு சக்தியை உடையது. ஆகவே அதிகாலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்தினால், அது நமது உடலில் உள்ள உள்சூட்டுடன் தொடர்பு கொள்வதால் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து ,சிறுநீரகங்கள்,மலக்குடல் போன்ற உள்ளுறுப்புகள்  வலிமை பெறுகின்றன. இந்த உறுப்புகளில் உள்ள நரம்புகளும்,இரத்தக் குழாயகளும் தூய்மை அடைகின்றன.


தொடரும் 


    












   










              

Sunday, January 23, 2011

STHALA MAGIMAI-4


 சிவ பெருமான் 
 ஸ்தல மகிமை-4 

    பிரணவ நாதம் 'அ','உ','ம' என்ற மூன்று ஒலிக்கூருகளையும் 1001 பீஜாட்சரக் கூறுகளையும் உடையது.இந்த சகஸ்ர பீஜாட்சரங்களில் மூன்றாவதாக அமைந்த பீஜாட்சர சக்தியே கமணீயம் என்னும் சக்தியாகும்.


   நமது பாரத பூமியில் தேவியின் 51 சக்தி      பீடங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு திருக்கோயில்கள் அமைந்திருப்பதுபோலவே பிரணவத்தின் 1001 பீஜாட்சரக் கூருபாடுகளுக்கும் பல சிவலிங்கங்கள் தோன்றி,அனைத்து உயிர்களையும் காத்து வருகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் இலிங்க வித்துக் கூறு வித்தை என்னும் என்னும் சித்தா கிரந்தங்களில் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளன.திருச்சி அருகே உள்ள சிறுகமணி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரிபக்தவத்சலேஸ்வரர்  பிரணவத்தில் பொதிந்திருக்கும் கமணீய சக்திகளை பூவுலகில் நிரவும் அனுகிரக மூர்த்தியாக அமைந்துள்ளது நமக்குக் கிடைத்துள்ள பெரும் பாக்கியமே! 


     கமணீய சக்தி  - ஒரு விளக்கம் 

    கமணீயம் என்னும் பீஜாட்சர சக்தியை மனிதர்களுக்குப் புரியும் விளக்குவது மிகவும் கடினமான செயல்.பீஜாட்சர ரகசியங்களைஎல்லாம் மனித மனம் புரிந்துகொள்வது கடினம் என்பதால்தான் இறைவனின் பரம ஸ்வரூபதையே பல கல்யாண குணங்களாக வர்ணித்து,சகஸ்ர நாமம் என்று ஆயிரம் நாமங்களால் வழிபடும் முறைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் போன்ற சகஸ்ர நாமத் துதிகளில் இத்தகைய பிரணவக் கூறுபாடுகளே இறைவனின் திருப்பெயர்களாக,இறைப்பரம்போருளின்எல்லைஇல்லா லீலைகளாக, அவதாரக் கிருதியங்களாக வர்ணிக்கப்பட்டுள்ளன.


தொடரும்