AMAZON SHOP

Friday, November 25, 2011

STHALA MAGIMAI-15

                                 
                                                                             சிவ பெருமான்
     இந்திரன் எம்பெருமானைப் பணிந்து வணங்கி,"ஈசனே! அடியார்களின் நேசனே!அறியாமையால் தங்களிடம் ஆயிரம் ஊனக் கண்களை அபசாரம் செய்துவிட்டேன்.ஆனால் தாங்களோ பெரும் கருணை கூர்ந்து, அடியேனுக்கு அகக் கண்ணான ஞானக் கண்ணையே வழங்கி விட்டீர்கள். ஆயிரமாயிரம் ஊனக் கண்களைவிட, ஞானம் புகட்டும் ஒரு அகக் கண்ணே உயர்ந்தது என்ற அற்புதமான பாடத்தை இன்று எனக்குப் புகட்டி விட்டீர்கள். தங்கள் கருணைக்கு எல்லைதான் உண்டோ?" என்று மனம் விட்டுக் கதறி அழுதான்.


  ஆயிரம் கண்ணுடையார்! 

           இந்திரனுக்குச் சாப விமோசனம் அளித்து அவன் கண்களைத் தம் லிங்கத் திருமேனியில் ஏற்றதால்,சித்தர்கள் சிறுகமணி ஈசனை 'சகஸ்ராட்ஷா நாதர்' அதாவது 'ஆயிரம் கண்களை உடையவர்' என்று போற்றுகின்றார்கள்.
இதிருதல இறைவனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உரைவதை இன்றும் பக்தர்கள் தரிசித்து அனுக்ரகம் பெறலாம்.


தொடரும் 


   

Sunday, November 13, 2011

STHALA MAGIMAI-14


சிவ பெருமான்                                                    
                     பரிந்து காத்த பக்தவத்சலன்!


    தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் தவறுக்கு உரிய தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். இறைவனின் தண்டனையிலிருந்து எவருமே தப்ப முடியாது. இது இறைவனே விதித்த விதி. இந்த இயற்கை விதியிலிருந்து எவருக்குமே விலக்கு கிடையாது.இது இறைவனே விதித்த விதி. இந்த இயற்கை விதியிலிருந்து எவருக்குமே விலக்கு கிடையாது. அதனால் இந்திரன் உடலிலிருந்த கண்களையும், கரிய நிறத்தையும் வெண்மணி ஈசனே மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.


    ஓராயிரம் யுகங்கள் முடிவடைந்தவுடன் இந்திரன் பூரணமான சாப விமோசனத்தை பெற்றான்.அவன் உடலிலிருந்த கண்கள் அனைத்தையும் எம்பெருமானே ஏற்றுக்கொண்டார்.இறைவனின் எல்லையில்லாக் கருணையை உணர்ந்த இந்திரன் மனம் உருகி, ஆனந்தக் கண்ணீர் மல்க எம்பெருமானை நோக்கி, "பக்தவத்சலா! பக்தவத்சலா! பக்தவத்சலா! " என்று அழைத்துக் கூத்தாடினான்.அவ்வாறு இந்திரன் தன்னை வேண்டித் துதித்த நாமத்தையே, வெண்மணி ஈசன் அன்று முதல் தமக்குரிய திருப்பெயராய் அன்போடு ஏற்றுக் கொண்டார்.


  'பால்வண்ண நாதர்' எனப் பல யுகங்களாய்த் 
   திகழ்ந்த ஈசன், தற்போது 'பக்தவத்சலேஸ்வரர்'
   என்ற திருநாமம் தாங்கி, தன்னைத் தேடி வந்து 
   பணியும் பக்தர்களுக்குப் பரிவுடனே அருள் பாலிக்கின்றார்.இந்திரனுக்குச் சாப வோமோசனம் தந்த அந்த வெண்மணித் திருத்தலம் காலப்போக்கில் 'சிறுகமணி' எனப் மாறி,திருச்சி அருகே காவிரிக் கரையில் ஒரு சிற்றூராய் இன்று விளங்குகின்றது.


தொடரும் 


    

Wednesday, October 12, 2011

STHALA MAGIMAI-13


 சிவ பெருமான் 
                                                              
                 வெண்மணி வந்தடைந்தானே! 

   தாங்க முடியாத வெட்கமும் வேதனையும் அடைந்த இந்திரன் தக்க பரிகாரம் தேடி பூலோகம் வந்தான். பொன்னி நதி தீரத்தில் வெண்மணி என்ற திருத்தலத்தை அடைந்து,அங்கு குடிகொண்டிருந்த ஈசனைச் சரண் அடைந்தான்.அந்த ஈசனின் திருநாமமோ பால்வண்ண நாதர்,வெண்மணி ஈசன் என்பதாகும்.

    அக்காலத்தில் அதிருக்கொயிலைச் சுற்றி ஆவினங்கள் கூட்டமாக மேயும்.ஸ்ரிசிவபெருமானும் திறந்த வெளியில்தான் வீற்றிரின்தார். பசுக்கள் எல்லாம் அருணோதய வேளையில் வந்து,லிங்கத் திருமேனியில் தாங்களாகவே பாலைச் சொரிந்து விட்டுச் செல்லும். எம்பெருமானின் லிங்க வடிவமும் பால் வண்ண நிறத்தில் வெண்மையாக ஒளிரும். பால் சுரந்த திருமேனியில் காலைக் கதிரவனின் செங்கதிர்கள் பட்டு ஓளிரும் அக்காட்சியோ கயிலாயத்தை நேரில் தரிசிப்பது போல் கண்கொள்ளாக் காட்சியாக ஜொலிக்கும். 

    வெண்மணித் திருத்தலத்தில் இந்திரன் ஆயிரம் யுகங்கள் தொடர்ந்து தவம் இயற்றினான்.ஒவ்வொரு யுக முடிவிலும் அவன் உடலில் இருந்த ஒரு யோனிக் கண்ணை எம்பெருமான் தன்னுடைய லிங்கத் திருமேனியில் ஏற்றுக்கொண்டார். அதனால் அவருடைய உருவமும் சிறிது சிறிதாகக் கரிய நிறமாக மாறத் தொடங்கியது. மாறாக இந்திரன் படிப்படியாகத் தன்னுடைய சுய உருவத்தையும் தேவ ஒளியையும் மீண்டும் பெற ஆரம்பித்தான்.

 தொடரும் 

  

Saturday, September 24, 2011

STHALA MAGIMAI-12


                                                 சிவ பெருமான் 

      ஆசையே அழிவிற்கு காரணம்!

  எம்பெருமான் மீண்டும் எச்சரிக்கை செய்தார். "இந்திரா! உன்னுடைய தகுதிக்கு மீறிய ஆசையால் விளையப் போகும் விபரீதத்தை உணரும் நிலையில் நீ இல்லை. இருந்தாலும் உன்னுடைய விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுகின்றேன்." என்று அருளி மறைந்தார். இந்திரனும் தான் மேற்கொண்ட தவத்தால் ஒரு பெரிய காரியத்தை சாதித்து விட்ட பெருமிதத்தில் தேவலோகத்தை அடைந்தான்சித்தர்களுடைய கண்ணோட்டத்தில 'இறைவனை தரிசிக்க வேண்டும்' என்று நினைப்பது கூட சுயநலம் கலந்த எண்ணமே. மற்றவர்களுக்கு இறைவனின் தரிசனத்தை பெற்றுத் தரவேண்டும் என நினைப்பதே நியாயமான பொதுநல விருப்பம். எனவே, இந்திரனின் சுயநல ஆசையால் அவன் பெற்ற இறை தரிசனம் 'எது நல்லது? எது கெட்டது?' எனப் பகுத்தறியும் ஆற்றலை அவனுக்கு அளிக்கவில்லை. மாறாக அவனுடைய காம எண்ணத்தை பல மடங்காகப் பெருக்கி விட்டது. புண்ணிய சக்தி எதையும் பன்மடங்கு பெருக்கும் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதானே? 


   காம நோய் பெருகிய காரணத்தால் இந்திரனுக்கு  
 கௌதம ரிஷியின் பத்தினியான அகலிகை மீது தீராத மோகம் ஏற்பட்டது. அதனால் அவன் ரிஷியின் சாபத்திற்கு ஆளாக நேரிட்டது. இந்திரன்  
 பெற்ற வரத்தால் அவன் விருப்பபடியே அவனுக்கு ஆயிரம் கண்கள் இறைவனால் வழங்கப்பட்டன. ஆனால், சுயநலத்தால் இந்திரன் பீடிக்கப்பட்டதால் அகக் கண்களுக்கு பதிலாக ஆயிரம் யோனிக் கண்கள் எம்பெருமானால் அளிக்கப்பட்டன. இந்திரனுடைய உடலும் கரிய நிறமாக மாறி, அவன் தன்னுடைய தேவ ஒளியை இழந்தான்.


தொடரும்