AMAZON SHOP

Tuesday, July 31, 2012



Wednesday, June 20, 2012

STHALA MAGIMAI-21

                  
                                                               சிறுகமணி லிங்கம்                           
   
         தற்காலத்து பெண்களும் மைத்ரேயி தேவியை போலவே பூணூல் அணிந்து, ஸ்ரீகற்பகாம்பிகை சன்னதி முன் அமர்ந்து ஸ்ரீகாய்திரீ மந்திரம் ஜபித்தால் நலம் தரும்.சமூக,குடும்ப,பாரம்பரியக் காரணங்களால் பூணூல் அணிய இயலாதவர்கள் இடுப்பில் அறைந்ஞான் கயிறு,மணிக்கட்டில் காசிக் கயிறு ,போன்ற காப்பு ரட்சைகளையாவது அவசியம் அணிதல் வேண்டும்.


      சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை பெண்கள் விரல் நுனிகளால் தொட்டுக் கொண்டு கீழ்கண்ட துதியை ஓதுதல் நலம் தரும்.


     ஹரித்ரா குங்கும தேவ்யை நமஹா 
     ஹரித்ரா குன்குமாயை நமஹா 
     யத் பூஜிதம் மாயா தேவி பரிபூரணம் ததாச்துதே 
     அனையா பூஜையா ஸ்ரிஹரித்ரா குங்கும                     தேவி பரியாதாம்
      யாதேவி சர்வபூதேஷு ஹரித்ரா குங்கும 
                                                   ரூபேண சம்ஸ்திதா   
       நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை 
                                                           நமோ நமஹா 


     இவ்வாறு தொடர்ந்துஒன்பது வியாழக்கிழமைகளில் ஸ்ரிகற்பகாம்பிகையை வழிபட்டுவந்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.என்பது தர்மத்வஜாய ரிஷியின் புதல்வியான துளசி தேவி பெற்றுத் தந்த வரம்.இத்துடன் ஸ்ரிக்ரிஷ்ணர் அருளிய தர்மத்வஜாய துதியையும் ஓதுவது சிறப்பு. இவ்வாறு தொடர்ந்து 48 வியாழக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் பெண்கள் தங்கள் பெயருக்கு உரிய பீஜாட்சர சக்திகளையே அறியும் அளவிற்கு ஞானத்தை பெறுவர். (இந்த வழிபாட்டில் பொதிந்துள்ள பல அற்புத இரகசியங்களை தக்க குருநாதர் மூலம் தெரிந்துகொள்ளவும்.)


தொடரும் 


                                                                                                             

Saturday, May 19, 2012

STHALA MAGIMAI-20

                 
                                  சிறுகமணி லிங்கம் 


            தர்காலதில் பெண்களில் பலர்   கல்வி,வேலை நிமித்தமாகப் பள்ளி, அலுவலகம், கடைவீதி போன்ற பல போது இடங்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் அவர்களுக்கு அதிகமான பாதுகாப்புச் சக்திகள் தேவைப்படுகின்றன. எதிர்காலத்தில் இத்தகைய பிரச்னைகளை பெண்கள் சமுதாயம் சந்திக்க வேண்டிவரும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த ரிஷிகள் அதற்கான பாதுகாப்பு பூஜைகளை அருளியுள்ளனர்.

   இத்திருத்தலத்தில் உறையும் ஸ்ரிகற்பகாம்பிகை வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்புச் சக்திகளை சிறப்பாக அருள வல்ல அம்பிகை. பல யுகங்களுக்கு முன்னரே மைத்ரேயி தேவியால் ஆராதிக்கப்பட்டவள்.

    மைத்ரேயி தேவி அருளிய பூஜை முறை.
            மைத்ரேயி தேவி அந்த யுக நியதிப்படி பூணூல் அணிந்து ஒரு கோடி முறை ஸ்ரீகாய்திரீ மந்திரம் ஜபித்து, ருத்ர,சமக,வேத மந்திரங்களை ஒரு லட்சம் தடவை ஓதி வழிபட்டாள். பின்னர் 12  லட்சம் பேருக்கு அன்னதானம்  அளித்துத் தன் பூஜையை நிறைவு sஎய்து, அந்த பூஜா பலன்களை எல்லாம் தேவியிடம் அர்ப்பணித்து,  இனி வரும் யுகங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேண்டிய பாதுகாப்புச் சக்திகளை  அருளும்படி தேவியை வேண்டினாள். 

தொடரும் 

Friday, March 23, 2012

STHALA MAGIMAI-19

                                                                   
                            
                                                              சிறுகமணி லிங்கம் 

                   
         தம் தவறை உணர்ந்த பிரம்ம தேவர் ஸ்ரீமுருகப் 
 பெருமானின் கருணையால் மீண்டும் தமது பிரம்ம பதவியைப் பெற்று சிருஷ்டியைத் தொடங்கியபோது,தாம் செய்த தவறுக்கு பிராயச்சிதமாகவும்,மீண்டும் இத்தகைய தவறுகள் தமது பதவிக் காலத்தில் ஏற்படாமல் இருக்கவும் இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஸ்ரிகற்பகாம்பிகையை வணங்கி வழிபட்டார். 


      இவ்வாறு ஒரு உதய கல்பத்திலும்,அஸ்தமன கல்பத்திலும் பிரம்ம தேவர் வழிபட்டதால் இதிருதல அம்பிகைக்கு 'கல்பகாம்பிகை' என்ற திருநாமமும் ஏற்பட்டது. பிரம்ம தேவரால் அந்த யுகத்தில் தோன்றிய வழிபாடு இன்றும் தொடர்ந்து 
நிறைவேற்றப்பட்டு வருவது இத்திருத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். கல்பங்கள் கடந்த நாயகியே கல்பகாம்பிகை. 


    காவல்துறை,நீதித் துறை, அரசியல்,ஆன்மீகம், சமூகசேவை போன்ற பொதுத் துறைகளில் இருப்போர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகையில்,பொது மக்களுக்குத் துன்பம் 
ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அத்தகையோர் இதிருதல அம்பிகையை வழிபட்டு வருவதால் தங்கள் துறையில் தவறுகள் ஏற்படாமலும், செய்யாத தவறுகளுக்குப் பழி ஏற்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஸ்ரிகற்பகாம்பிகை துணை புரிவாள்.


 தொடரும்