AMAZON SHOP

Friday, March 23, 2012

STHALA MAGIMAI-19

                                                                   
                            
                                                              சிறுகமணி லிங்கம் 

                   
         தம் தவறை உணர்ந்த பிரம்ம தேவர் ஸ்ரீமுருகப் 
 பெருமானின் கருணையால் மீண்டும் தமது பிரம்ம பதவியைப் பெற்று சிருஷ்டியைத் தொடங்கியபோது,தாம் செய்த தவறுக்கு பிராயச்சிதமாகவும்,மீண்டும் இத்தகைய தவறுகள் தமது பதவிக் காலத்தில் ஏற்படாமல் இருக்கவும் இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஸ்ரிகற்பகாம்பிகையை வணங்கி வழிபட்டார். 


      இவ்வாறு ஒரு உதய கல்பத்திலும்,அஸ்தமன கல்பத்திலும் பிரம்ம தேவர் வழிபட்டதால் இதிருதல அம்பிகைக்கு 'கல்பகாம்பிகை' என்ற திருநாமமும் ஏற்பட்டது. பிரம்ம தேவரால் அந்த யுகத்தில் தோன்றிய வழிபாடு இன்றும் தொடர்ந்து 
நிறைவேற்றப்பட்டு வருவது இத்திருத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். கல்பங்கள் கடந்த நாயகியே கல்பகாம்பிகை. 


    காவல்துறை,நீதித் துறை, அரசியல்,ஆன்மீகம், சமூகசேவை போன்ற பொதுத் துறைகளில் இருப்போர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகையில்,பொது மக்களுக்குத் துன்பம் 
ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அத்தகையோர் இதிருதல அம்பிகையை வழிபட்டு வருவதால் தங்கள் துறையில் தவறுகள் ஏற்படாமலும், செய்யாத தவறுகளுக்குப் பழி ஏற்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஸ்ரிகற்பகாம்பிகை துணை புரிவாள்.


 தொடரும்