AMAZON SHOP

Monday, September 24, 2012

STHALA MAGIMAI-23


               
                                             சிறுகமணி லிங்கம்

        இவ்வாறு நம் அனைவரின் பெயருக்குமே ஒரு ஆழ்ந்த கருத்து உண்டு.தங்கள் பெயரின் ஆன்மீகப் பின்னணியை அறிய விரும்புவோர் சிறுகமணி திருத்தலத்துக்கு வந்து ஸ்ரிபக்தவத்சலேஸ்வரர் மற்றும் ஸ்ரிகற்பகாம்பிகையைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால்,சுயநாமத்தின் உண்மைப் பொருளை உணரலாம்.இவ்வாறு ஒவ்வருவரும் தங்கள்  திருநாமத்தின் மகிமையை அறிய உதவும் அற்புதமான தலமே சிறுகமணி திருத்தலமாகும்.

            கெளலினீ  குங்கும பூஜை 

 பெண்கள் தங்கள் கணவன்மார்களுடைய ஆயுளை விருத்தி செய்து தருவதற்கு உரிய அற்புத பூஜையே கெளலினீ குங்கும பூஜை சிவ சக்தி ஐய்கய மங்கள பூஜை எனவும் சிறப்பு பெற்ற இந்த பூஜை  கணவனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிப்பதுடன் குடும்பத்தில் ஒற்றுமையும்,சமுதாயத்தில் அமைதியும் நிலை நாட்டும் சிறப்பான வழிபாடாகும்.மைத்ரேயி தேவி அருளிய இப்பூஜையை பெண்கள் பலரும் சத்சங்கமாக நிறைவேற்றுவது பூஜா பலன்களைப் பன்மடங்காக விருத்தி செய்யும்.

     ஒரு மரத் தட்டிலோ,வாழை இலையிலோ பிள்ளையார் சுழி இட்டு, ஒரு முக்கோணம் வரைந்து கொள்ளவும். முக்கோணத்தின் மேல் நுனி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும.அதற்குள் ஒரு வட்டத்தை முக்கோணத்தின் எல்லா பக்கங்களையும் தொட்டுக் கொண்டிருக்குமாறு வரைந்து கொள்ளவும்.

தொடரும் 

    

Monday, August 13, 2012

STHALA MAGIMAI-22

                                                                         
                           
                                                            சிறுகமணி லிங்கம்

                     சுய நாமத்தின் மகிமை அறிய 


    பிரணவமே எல்லா பீஜாட்சர சக்திகளுக்கும் மூலமாக இருப்பதால்,கமனீய பீஜாட்சர சக்திகள் பொலியும் இத்திருத்தலத்தில் சுயநாம ஜபத்தை,ஓதி ஈசனையும்  அம்பிகையையும் வழிபடுவதால் கிட்டும் பலன்களை அளவிட்டுக் கூற முடியாது. உதாரணமாக, தர்மத்வஜாய ரிஷியின் புதல்வியாம் துளசி தேவிக்குரிய 'பிருந்தா'எனும் திருநாமத்தினை பற்றிப் பாப்போம்.


   'பிருந்தா' என்ற நாமம் கீழ்kகண்ட பீஜாட்சர சக்திகளை உடையது.
        ப் - ஐம்,க்லீம்,வம் 
        ரூ - ரிம்,ஹம 
          ன் - லம்,ஹம  
         தா - ரீம,லம்,கம் ,க்ரீம்


   'பிருந்தம்' என்ற நாமம் 'துளசி' என்ற பொருள் உடையதாக இருப்பதுடன் அந்த நாமத்தில் மேற்கண்ட 11 பீஜாட்சர சக்திகள் பொலிந்து பிரகாசிக்கின்றன. அதனால்தான் 'பிருந்தா' என்ற நாமம் உடையோர் ஸ்ரிமன்னராயனனைத் தொடர்ந்து ஆராதனை செய்வதால் குறையற்ற செல்வதையும்,வளமான வாழ்வையும் பெறுவார்கள் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

தொடரும் 

     

Tuesday, July 31, 2012



Wednesday, June 20, 2012

STHALA MAGIMAI-21

                  
                                                               சிறுகமணி லிங்கம்                           
   
         தற்காலத்து பெண்களும் மைத்ரேயி தேவியை போலவே பூணூல் அணிந்து, ஸ்ரீகற்பகாம்பிகை சன்னதி முன் அமர்ந்து ஸ்ரீகாய்திரீ மந்திரம் ஜபித்தால் நலம் தரும்.சமூக,குடும்ப,பாரம்பரியக் காரணங்களால் பூணூல் அணிய இயலாதவர்கள் இடுப்பில் அறைந்ஞான் கயிறு,மணிக்கட்டில் காசிக் கயிறு ,போன்ற காப்பு ரட்சைகளையாவது அவசியம் அணிதல் வேண்டும்.


      சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை பெண்கள் விரல் நுனிகளால் தொட்டுக் கொண்டு கீழ்கண்ட துதியை ஓதுதல் நலம் தரும்.


     ஹரித்ரா குங்கும தேவ்யை நமஹா 
     ஹரித்ரா குன்குமாயை நமஹா 
     யத் பூஜிதம் மாயா தேவி பரிபூரணம் ததாச்துதே 
     அனையா பூஜையா ஸ்ரிஹரித்ரா குங்கும                     தேவி பரியாதாம்
      யாதேவி சர்வபூதேஷு ஹரித்ரா குங்கும 
                                                   ரூபேண சம்ஸ்திதா   
       நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை 
                                                           நமோ நமஹா 


     இவ்வாறு தொடர்ந்துஒன்பது வியாழக்கிழமைகளில் ஸ்ரிகற்பகாம்பிகையை வழிபட்டுவந்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.என்பது தர்மத்வஜாய ரிஷியின் புதல்வியான துளசி தேவி பெற்றுத் தந்த வரம்.இத்துடன் ஸ்ரிக்ரிஷ்ணர் அருளிய தர்மத்வஜாய துதியையும் ஓதுவது சிறப்பு. இவ்வாறு தொடர்ந்து 48 வியாழக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் பெண்கள் தங்கள் பெயருக்கு உரிய பீஜாட்சர சக்திகளையே அறியும் அளவிற்கு ஞானத்தை பெறுவர். (இந்த வழிபாட்டில் பொதிந்துள்ள பல அற்புத இரகசியங்களை தக்க குருநாதர் மூலம் தெரிந்துகொள்ளவும்.)


தொடரும்