AMAZON SHOP

Monday, September 24, 2012

STHALA MAGIMAI-23


               
                                             சிறுகமணி லிங்கம்

        இவ்வாறு நம் அனைவரின் பெயருக்குமே ஒரு ஆழ்ந்த கருத்து உண்டு.தங்கள் பெயரின் ஆன்மீகப் பின்னணியை அறிய விரும்புவோர் சிறுகமணி திருத்தலத்துக்கு வந்து ஸ்ரிபக்தவத்சலேஸ்வரர் மற்றும் ஸ்ரிகற்பகாம்பிகையைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால்,சுயநாமத்தின் உண்மைப் பொருளை உணரலாம்.இவ்வாறு ஒவ்வருவரும் தங்கள்  திருநாமத்தின் மகிமையை அறிய உதவும் அற்புதமான தலமே சிறுகமணி திருத்தலமாகும்.

            கெளலினீ  குங்கும பூஜை 

 பெண்கள் தங்கள் கணவன்மார்களுடைய ஆயுளை விருத்தி செய்து தருவதற்கு உரிய அற்புத பூஜையே கெளலினீ குங்கும பூஜை சிவ சக்தி ஐய்கய மங்கள பூஜை எனவும் சிறப்பு பெற்ற இந்த பூஜை  கணவனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிப்பதுடன் குடும்பத்தில் ஒற்றுமையும்,சமுதாயத்தில் அமைதியும் நிலை நாட்டும் சிறப்பான வழிபாடாகும்.மைத்ரேயி தேவி அருளிய இப்பூஜையை பெண்கள் பலரும் சத்சங்கமாக நிறைவேற்றுவது பூஜா பலன்களைப் பன்மடங்காக விருத்தி செய்யும்.

     ஒரு மரத் தட்டிலோ,வாழை இலையிலோ பிள்ளையார் சுழி இட்டு, ஒரு முக்கோணம் வரைந்து கொள்ளவும். முக்கோணத்தின் மேல் நுனி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும.அதற்குள் ஒரு வட்டத்தை முக்கோணத்தின் எல்லா பக்கங்களையும் தொட்டுக் கொண்டிருக்குமாறு வரைந்து கொள்ளவும்.

தொடரும் 

    

No comments:

Post a Comment