AMAZON SHOP

Sunday, January 8, 2012

STHALA MAGIMAI-17

                                                 
                                                                                        சிறுகமணி லிங்கம் 
                           
         கல்பம்தோறும் அருளாட்சி புரியும் ஸ்ரிகற்பகாம்பாள்.


     படைப்புத் தொழிலுக்கு மூலாதாரமான பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக் கடவுளாம் பிரம்மாவை ஸ்ரிமுருகப்பெருமான் சிறையில் அடைத்தார் அல்லவா? அதனால் எல்லா எல்லா உயிர்களும் படைக்கப்படாமல் ஸ்ரிஷ்டியில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இக்குரையைச் சீர்செய்யும்படி எம்பெருமான் முருகனை அழைக்க,முருகப்பெருமானோ 'எதையுமே பெற்ற தாயிடம் இருந்து பெறுவதுதான் சிறப்பு ' என்ற காரணத்தால் அன்னை பார்வதி தேவியை வணங்கி,தனக்கு, ஸ்ருஷ்டி தத்துவத்தை புகட்டும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டார்.


      ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற ஒரு தூசுதானே பல கோடி அண்டங்களையே உருவாக்குகின்றது! அம்பிகையைத்  தவிர ஸ்ருஷ்டி தத்துவத்தை வேறு யாரால் முறையாகப் புகட்ட முடியும்? எனவே, முருகப்பெருமானின் விருப்பத்திற்கு இணங்கிய பார்வதி தேவியும் அனைத்து உயிர்களின் ஸ்ரிஷ்டித் தத்துவத்தை முருகப் பெருமானுக்கு முறையாகப் புகட்டினார்.


   அவ்வாறு குமரனுக்கு ஸ்ருஷ்டி ரகசியத்தை அம்பிகை அருளிய கோலமே இத்திருத்தலத்தில் நான்கு கரங்களுடன் எழுந்தருளியுள்ள கோலமாகும்.


தொடரும் 


   

No comments:

Post a Comment