AMAZON SHOP

Sunday, September 26, 2010

STHALA VARALAARU - 5




ஸ்தல வரலாறு- 5
     
   
  நவக்ராகன்களாம் ஒன்பது கிரகங்கள் ஒரு மலர்ந்த தாமரை மலர்மீது தத்தம் நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். அந்த மண்டபம் அகலம் நீளம் கோபுர உயரம் அனைத்தும் ஒன்பதின் கூட்டு தொகையில் அமைக்கப்பட்டது தனி சிறப்பாகும். எனவே அனைத்து கிரகங்களும் சமமாக பாவிக்கப்பட்டு அனைத்து கிரக தோஷ பரிகார தலமாக அமைக்கப்பட்டுள்ளது. 

   சிவன் சன்னதி உள்ளே இடது பக்கம் சிறிய விநாயகர் வலது பக்கம் தண்டபாணியும் அமையப்பெற்றுள்ளது. கோயில் வெளிப்புறம் நுழைவாயிலுக்கு மேற்கில், கிழக்கு நோக்கிய காவல் தெய்வம் ஒன்று கையில் சாட்டையுடன் காட்சி தருகிறார்.

  இத்தல விருட்சம் வில்வ மரமாகும். கற்பக விருட்சம் என்பது தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கடைந்த போது தோன்றிய ஒன்றாகும். அதன் சிறப்பே மனதில் நினைத்த எதையும் நினைத்த உடனேயே வழங்குவதாகும். மனதில் நினைத்த எதையும் உடனே வழங்கும் கற்பக விநாயகர் மற்றும் அவரது தாயார் கற்பகாம்பிகை ஆகிய இருவரும் ஒருங்கே அமர்ந்து அருள் பாலிப்பது மிகமிக அரிதான ஒன்றாகும்.

தொடரும் 

   




   






               

Sunday, September 19, 2010

STHALA VARALAARU - 4

           
 LORD SIVA  
ஸ்தல வரலாறு- 4


  பிரம்மா: சிவனின் கோமுகிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள பிரம்மா சிலாரூப சாமுத்ரிகா லட்சணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற திறுருவுருவமாக காட்சியளிக்கிறது.


 மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அவனது ஞானக்கண் திறக்க வேண்டி விஷ்ணுதுர்கையாக அத்தேர் மீதேயமர்ந்து காட்சி கொடுத்த அம்பிகை அந்த நிலையிலேயே தேர்மீதமர்ந்த படியே காட்சியளிக்கிறார். இது மிக அறிதான அமைப்பாகும்.


   எதிர்புறத்தில் சண்டிகேஸ்வரர்  காட்சி தருகின்றார்.வடகிழக்கு மூலையில் அபிஷேக நாழி கிணறு அமைந்துள்ளது.அதன் அருகில் நவகிரக புதுமண்டபமும், சிவன் சன்னதிக்கு உள்ளே அமைந்திருந்த பைரவர் சன்னதி கிணற்றுக்கு அருகிலும் சூரியன் சன்னதி வாயில் நந்தியெம் பெருமானுக்கு தென்கிழக்கு மூலையிலும் புதியதாக மண்டபம் எழுப்பி ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது.     


தொடரும் 


   














   













Sunday, September 5, 2010

STHALA VARALAARU - 3

   
  LORD SIVA
 ஸ்தல வரலாறு- 2 
             
        முதலில் நம் கண்ணுக்கு புலப்படுவது மயில் மீதமர்ந்த முருகன் புடைப்பு சிற்பம் அதன் மேல் சிறியகல் மண்டபம் அதன் கீழ் கல் ஜன்னல், தெற்கு நோக்கிய நிலையில் ஞானமளிக்கும் குருவாக காட்சி தருகிறார்.சுற்றுப்புரத்தே நாம் காண்பது நடனமாடும் நர்தன விநாயகரை அடுத்து காட்சி தருவோர் தென்முக கடவுளாம் தகிஷினாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்துள்ள தட்சினாமூர்த்தி அமைப்பு மிகவும் பிரமிப்பூட்டுவதாக உள்ளது. சனகாதி முனிவர்கள் இருபுறமும் அமர்ந்திருக்க ஞ்னகுருவாம் குருபகவான் தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.


   கிழக்கு நோக்கிய நிருதிவினாயகராம் கற்பக விநாயகர் வள்ளி , தெய்வானை சமேத சுப்பிரமணியர் லிங்கோத்பவர் பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.         


  லிங்கோத்பவர்: சிவனின் அடிமுடி காண இயலாத அண்ணலின் சரித்திரத்தை விளக்கும் வகையில் பிரம்மா அன்னப்பறவையாக சிவனின் முடி காண மேல்நோக்கி சென்று தோல்வியுற்று திரும்பியதையும், விஷ்ணுபகவான் சிவனின் அடிகாண்பதற்காக வராக ரூபம் எடுத்து கீழ் நோக்கி சென்று தோல்வி அடைந்ததையும் தத்ரூபமாக விளக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.


தொடரும்


 DHINAMALAR- NEWS
      
Yoga:the Sivananda Yoga Video [VHS]