![]() |
| LORD SIVA |
ஸ்தல வரலாறு-9
தற்போது தேவஸ்தானம்,
பெட்டவைதலையில் அமைந்துள்ள அருள்மிகு மத்யார்ஜுநேஸ்வரர் திருக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும். மேற்கண்ட சிவன் கோவிலை கட்டி அவ்வூருக்கு இராஜேந்திர
சோழன் பேட்டை என்று பெயரிட்டு, பலவிதமான தானங்களை வழங்கியுள்ள காரனத்தால் இக்கோயிலும் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதுதான் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.
மேலும் இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் அமைந்துள்ள அம்பாள்
திரஊருவங்கள் மட்டுமே மேலிரு கரங்கள் தாமரை மலர்கள் அமைக்கப்பெற்றதாக
உள்ளது என்பதை உற்றுநோக்குதற்குரியாது. ஆலமர் கடவுள், லிங்கோத்பவர்,விஷ்ணு துர்க்கை கல்லில் செதுக்கி
எடுக்கப்பட்ட அழகு வேலைப்பாடுகளுடன் கூடிய கல்,
ஜன்னல்,அதன் தோகை மையிலில் அமைந்துள்ள முருகப்பெருமான்,புடைப்பு சிற்பம்,அதற்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சிருதனி மேல்மண்டபம் ஆகியன சோழர் காலத்து கலை நுணுக்கங்களுக்கு எடுத்து காட்டுகளாக அமைந்துள்ளது.மேலும் தஷிணாமூர்த்தி சந்நிதி கோஷ்டதிற்கு
ஏற்ப வேலைப்பாடு உடைய சிறு முன் மண்டபம்
அமைக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்புடையதாக
கருதப்படுகிறது.
தொடரும்

No comments:
Post a Comment