ஸ்தல வரலாறு-7
அருள்மிகு பக்தவத்சலேஸ்வரர் சன்னதி,கர்பகிரகதிற்கு அடுத்து அர்த்த மண்டபம்,கீழ்மேலாக வடபுரமும்,தென்புறமும் இருமேடைகள் அமைக்கப்பெற்றுள்ளது. தெற்குமேடை ஒரு மேன்மையான ஞானி ஒருவர் சமாதி என்றும் அவர் கமணீய பிரனவநாதர் என்றும் கூறப்படுகிறது. பலவேளைகளில் பல ரூபங்களில் கண்டு களிதுள்ளதாக பல பெரியவர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். எனவே கமணிய பிரனவநாதர் திருத்தலம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பல சித்து விளையாட்டுகளை கொண்ட சித்தர் பெருமக்கள் உண்டு வாழ்ந்து , கண்டு களித்து , விண்டு உணர்ந்து உய்வித்த இடமே அருள்மிகு கற்பகாம்பிகை உடனமர் பக்தவத்சலேஸ்வரர் திருத்தலமாகும்.
இத்திருக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் பெட்டவாய்த்தலை அருள்மிகு மத்யார்ஜுநேஸ்வரர் திருக்கோயில் நிர்வாக அலுவலர் நிர்வாகத்தின் கீழ் உள்ளதாகும். காலம்,பழமை, நாகரீகம் , ஆன்மிகம் ,செய்தி போன்றவற்றை காட்டும் காலக்கண்ணாடியாம் கல்வெட்டுக்கள் பல இத்திருக்கோயிலில் இருந்து அழிந்து இருப்பினும் சில கல்வெட்டுக்கள் இன்று வரை நிலைத்து நமக்கு ஆன்மீக செய்திகளை வெளிக்காட்டுவதாக உள்ளது. அவற்றுள் அருள்மிகு அருள்மிகு கற்பக விநாயகர் சன்னதியில் அமைந்துள்ள நான்கு கல்வெட்டுகளும் முக்கியமானதாக உள்ளது.
தொடரும்

No comments:
Post a Comment