![]() |
| சிவ பெருமான் |
STHALA MAGIMAI-11
ஆயிரம் கண் போதாதே !
எம்பெருமான் புன்னகை புரிந்தார். ஏன் தெரியுமா? இந்திரன் கூறியது முற்றிலும் சரியே. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனை முழுமையாக தரிசனம் செய்வது எவராலும் இயலாத காரியம்.தேவர்களும்,யோகிகளும், மகான்களும்,சித்தர்களும் அவர்தம் திரஊருவத்தின் ஒரு அணு அளவு தர்சனத்தையே பெற்றுள்ளனர் என்றால் மற்றவர்களின் நிலையை என்னென்று கூறுவது?
"இந்திரனே! இறைவனை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்ற உன்னுடைய எண்ணம் நல்ல எண்ணம்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால்,அதற்கான தகுதி உன்னிடம் இருக்கிறதா என்று முதலில் சிந்தித்து பார்"
"என் மேனியில் பாதியைப் பெற்ற சக்தியும்,என் வழித் தோன்றல்களான கணபதியும், முருகனுமே என்னை முழுமையாக உணர்ந்து கொண்டது கிடையாது. அவ்வாறிரிருக்க ஒரு தேவ நிலையில் உள்ள நீ என்னை முழுமையாக தர்சிக்க வேண்டும் என்று பேராசை அல்லவா? தகுதிக்கு மீறிய ஆசை கொள்ளலாமா?" என வினவினார் ஈசன் .
அதற்கு இந்திரனும் "ஐயனே,தங்களால் இயலாத காரியம் என ஒன்று உண்டா என்ன? விதியை விதித்தவரே தாங்கள்தான். தாங்கள் நினைத்தால் அந்த விதியை மாற்றி அமைக்கலாம் அல்லவா?எப்படியாவது அடியேனுடைய இந்தச் சிறிய ஆசையை தாங்கள் நிறைவேற்றியே ஆகா வேண்டும்". என்று மீண்டும் வேண்டினான்.
தொடரும்

No comments:
Post a Comment