![]() |
| சிவ பெருமான் |
நமசிவாய மந்திரம்-5
இவ்வாறு சைவசமய ஆசிரியர் பலரும் உலகுக்கு உபதேசிப்பது பஞ்சாட்சர மந்திரம் ஒன்றையே ஆகும்.
"சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவருமாவர்
சிவசிவ என்னச் சிவகதிதானே"
என்பது திருமந்திரம். இது மகாகாரண பஞ்சாட்சரம் எனப்படும்.
திருவைந்தெழுத்து ஒதுபவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்றாற்போல் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
1."நம சிவாய" - ஸ்தூல பஞ்சாட்சரம்
2. "சிவாய நம" - சூக்கும பஞ்சாட்சரம்
3. "சிவாய சிவ" காரண பஞ்சாட்சரம்
4. "சிவ" - மகா காரண பஞ்சாட்சரம்
5. "சிவாய சிவ" - மகா மனு
இதில் முதல் இரண்டுமே ந்ஞானநூல்களிலும் திருமுறைகளிலும் அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளன. பிற மூன்றும் மிகவும் பக்குவம் பெற்றவர்கள் குருவருள் வழி நின்று உணர்த்தி அனுபவிக்கக்கூடியது.
தொடரும்




