![]() |
| சிவ பெருமான் |
நமசிவாய மந்திரம்-௧
"நமசிவாய" என்ற மந்திரம் ஓதினால் நமக்கு உயர்ந்த நிலை கிடைக்கும். நீண்ட காலமாக இருந்துவரும் மாயைகள் அஞ்சி நம்மை விட்டு விலகிவிடும். பரம்பொருளுடன் நாம் கலந்துவிடலாம் என்று சிவவாக்கியர் கூறுகிறார்.
'உன்னை நான் மறந்தாலும் என்னுடைய நா 'நமசிவாய' என்ற நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும்' என்று சுந்தரர் கூறுகிறார்.
ஆவியீர் ஐந்தை அபரத்தே வைதோதில்
ஆவியீர் ஐந்தை அகற்றலாம் - ஆவியீர்
ஐந்தறலாம் ஆவியீர் ஐந்துறலாம் ஆவியீர்
ஐந்திடலாம் ஓரிரண்டோ பாய்ந்து - வள்ளலார்.
கருத்து:
தியான நிலையில் "சிவாய நமஹா"என்ற மந்திரத்தை ஓதினால் ஐம்புலன்களையும் அடக்கலாம். ஆபத்துக்களையும், விபத்துகளையும் தவிர்க்கலாம். பத்துக் கலைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
தொடரும்.

No comments:
Post a Comment