AMAZON SHOP

Sunday, January 2, 2011

STHALA MAGIMAI -1

        LORD SIVA
            ஸ்தல மகிமை-1          


       இதுவரை இந்த சிறுகமணி ஸ்தலத்தின் வரலாற்றை பார்த்தோம். இனி இந்த ஸ்தலத்தின் மகிமைகளைக் காண்போம்.


     தன் சாபம் நீங்கபெற்றதால் இந்திரன் ஆனந்த மிகுதி கொண்டு இந்த ஸ்தலத்து இறைவனை 'பகதவத்சலா' என அழைத்தால் அதையே திருநாமமாக கொண்டு ஈசன் இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.


     பல்வேறு சிறப்பு அம்சங்களைத் தன்னுள் தாங்கி  நிற்கும் இந்த ஆலயத்தைப்பற்றி பலர் அறியாது இருக்கின்றனர். உதாரணமாக, இங்கு கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளியுள்ள துர்க்கா தேவியின் மகிமையை பார்க்கலாம்.


  குருஷேத்திர யுத்தத்தின் போது  'தன் உற்றார் உறவினரோடு யுத்தம் செய்வதா என்ற மனக் குழப்பம் அர்ஜுனனுக்கு ஏற்பட்டதையும், அதைப் போக்க ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா பகவத் கீதையை உபதேசிததையும் நாமறிவோம். அதற்குப்பின் நடந்த சம்பவங்களை இருடிகளின் மகாபாரதத்தில் மட்டுமே காணலாம்.


  கீதோபதேசம் பெற்ற பின்னரும் அர்ஜுனனின் மனத் தளர்ச்சி முற்றிலுமாக நீங்கவில்லை. ஆகவே, ஸ்ரீகிருஷ்ணர் துக்க நிவாரணியாகத் திகழும் துர்க்கா தேவியை வேண்டும்படி அர்ஜுனனைப்   பணிந்தார்.


தொடரும் 


   


















   





















No comments:

Post a Comment