![]() |
| சிவ பெருமான் |
பிரணவ நாதம் 'அ','உ','ம' என்ற மூன்று ஒலிக்கூருகளையும் 1001 பீஜாட்சரக் கூறுகளையும் உடையது.இந்த சகஸ்ர பீஜாட்சரங்களில் மூன்றாவதாக அமைந்த பீஜாட்சர சக்தியே கமணீயம் என்னும் சக்தியாகும்.
நமது பாரத பூமியில் தேவியின் 51 சக்தி பீடங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு திருக்கோயில்கள் அமைந்திருப்பதுபோலவே பிரணவத்தின் 1001 பீஜாட்சரக் கூருபாடுகளுக்கும் பல சிவலிங்கங்கள் தோன்றி,அனைத்து உயிர்களையும் காத்து வருகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் இலிங்க வித்துக் கூறு வித்தை என்னும் என்னும் சித்தா கிரந்தங்களில் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளன.திருச்சி அருகே உள்ள சிறுகமணி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரிபக்தவத்சலேஸ்வரர் பிரணவத்தில் பொதிந்திருக்கும் கமணீய சக்திகளை பூவுலகில் நிரவும் அனுகிரக மூர்த்தியாக அமைந்துள்ளது நமக்குக் கிடைத்துள்ள பெரும் பாக்கியமே!
கமணீய சக்தி - ஒரு விளக்கம்
கமணீயம் என்னும் பீஜாட்சர சக்தியை மனிதர்களுக்குப் புரியும் விளக்குவது மிகவும் கடினமான செயல்.பீஜாட்சர ரகசியங்களைஎல்லாம் மனித மனம் புரிந்துகொள்வது கடினம் என்பதால்தான் இறைவனின் பரம ஸ்வரூபதையே பல கல்யாண குணங்களாக வர்ணித்து,சகஸ்ர நாமம் என்று ஆயிரம் நாமங்களால் வழிபடும் முறைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் போன்ற சகஸ்ர நாமத் துதிகளில் இத்தகைய பிரணவக் கூறுபாடுகளே இறைவனின் திருப்பெயர்களாக,இறைப்பரம்போருளின்எல்லைஇல்லா லீலைகளாக, அவதாரக் கிருதியங்களாக வர்ணிக்கப்பட்டுள்ளன.
தொடரும்

No comments:
Post a Comment