![]() |
| சிவ பெருமான் |
ஸ்தல மகிமை-2
அவர் அருளிய முறைப்படி அவ்விடத்திலேயே கண்களை மூடியபடி தேவியை த்யானித்த அர்ஜுனன் தன் கண்களை திறந்து பார்த்தபோது, தேரின் மேல் ஸ்ரிக்ரிஷ்ணருக்கு பதிலாக ஆங்கே துர்க்கா தேவி காட்சி அளித்தணல்!
ஸ்ரீக்ரிஷ்ணர் அருளிய 'ஜயோ பவது மே நித்யம்' என்ற மந்திரத்தை ஓதியவாறே, 18 முறை சாஷ்டாங்கமாக துர்க்கா தேவியை வீழ்ந்து வணங்க, அர்ஜுனனின் மனத்தளர்ச்சி முற்றிலுமாக முற்றிலுமாக அகன்றது. புத்துணர்ச்சி பெற்றவனாய் போரிடத் தயாரானான்.
தீயோரை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட வேண்டி ஸ்ரீக்ரிஷ்ணராய் அவதரித்தது ஸ்ரீமகாவிஷ்ணுதானே! அந்த தெய்வாம்சத்தின் ஒரு கூறே விஷ்ணு துர்கையாய்க் காட்சி தந்து, அர்ஜுனனின் மனத் தளர்வை போக்கியது. குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு தேரின் மேல் காட்சி தந்த தேவியே சிருகமணித் திருத்தலத்தில் கோஷ்ட மூர்த்தியாய் எழுந்தருளி அருள்பாலிக்கின்றால்.
'என்ன முடிவெடுப்பது?' என மனம் தடுமாறும் இக்கட்டான சூழ்நிலைகள் அனைவர் வாழ்விலும் ஏற்படுவதுண்டு. அத்தகையோர் சிறுகமணி திருத்தலம் வந்து, கிஷ்டமூர்த்தியாய் அருளும் துர்கையைத் தக்க அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு, ஸ்ரீகிருஷ்ணர் அருளிய மந்திரத்தை ஓதியவாறே குறைந்தது 18 முறையாவது சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி வந்தால், தெளிந்த, தீர்க்கமான முடிவை எடுக்கும் மனத்திட்பம் கிட்டும்.
ஓம் ஸ்ரீகுருவே சரணம் !!
சுபம்

No comments:
Post a Comment