AMAZON SHOP

Sunday, January 31, 2010

NAMASIVAYA MANDHIRAM - 5


 சிவ பெருமான் 
   நமசிவாய  மந்திரம்-5 


       இவ்வாறு சைவசமய ஆசிரியர் பலரும் உலகுக்கு உபதேசிப்பது பஞ்சாட்சர மந்திரம் ஒன்றையே ஆகும். 

  "சிவசிவ என்கிலர் தீவினையாளர் 
    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
     சிவசிவ என்றிடத் தேவருமாவர் 
     சிவசிவ என்னச் சிவகதிதானே"

   என்பது திருமந்திரம். இது மகாகாரண  பஞ்சாட்சரம் எனப்படும்.

    திருவைந்தெழுத்து ஒதுபவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்றாற்போல் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

     1."நம சிவாய" - ஸ்தூல பஞ்சாட்சரம் 
     2. "சிவாய நம" - சூக்கும பஞ்சாட்சரம் 
     3. "சிவாய சிவ" காரண பஞ்சாட்சரம் 
     4. "சிவ" - மகா காரண பஞ்சாட்சரம் 
     5. "சிவாய சிவ" - மகா மனு  

   இதில் முதல் இரண்டுமே ந்ஞானநூல்களிலும் திருமுறைகளிலும் அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளன. பிற மூன்றும் மிகவும் பக்குவம் பெற்றவர்கள் குருவருள் வழி நின்று உணர்த்தி அனுபவிக்கக்கூடியது.

தொடரும் 

    











    












Sunday, January 24, 2010

NAMASIVAYA MANDHIRAM -4


 சிவ பெருமான்  
  நமசிவாய  மந்திரம்-4    

                    ஞானசம்பந்தர் 

  "வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்த கூன்று 
    அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே"

  "செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு 
    அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே"

 "இம்மைவினை அடர்தெய்து போழ்கினும் 
   அம்மையினுந் துணை அஞ்செழுத்துமே"

   என்று உபதேசித்துள்ளார்.

         அப்பர் ஸ்வாமிகள் 

    "கற்றுணைப் பூட்டி - ஓர் கடலிற் பாய்ச்சினும் 
      நற்றுணை யாவது நமசிவாயவே"

   "நாவினுக் கருங்கலம்  நமசிவாயவே" 

   "விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்விழல் 
     உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் 
     பண்ணிய உலகில் பயின்ற பாவத்தை 
     நண்ணிநின் றறுப்பது நமசிவாயவே" 

    "நமசிவாயவே ஞானமும் கல்வியும் 
       நமசிவாயவே நானறி விசையும் 
      நமசிவாயவே நாதவின் றேத்துமே 
     நமசிவாயவே நன்னெறி காட்டுமே"

   இவ்வாறு சைவசமய ஆசாரியர் பலரும் உலகுக்கு உபதேசிப்பது பஞ்சாட்சர மந்திரம் ஒன்றையே ஆகும்.

தொடரும் 

      












   














     

Sunday, January 17, 2010

NAMASIVAYA MANDHIRAM-3


 சிவ பெருமான்  
நமசிவாய  மந்திரம்-3

                  இம்மந்திரத்தை இடையறாது மனதில் உச்சரிப்பவர்கள் சிவ சொரூபம் அடைகின்றனர். 

    சிவாய நம என்றும் மந்திரத்தை எல்லோரும் பொதுவாக த்யாநிக்கின்றனர்.  

     திருவைந்தெழுத்தை உச்சரிப்பதற்கு ப்ராரத்தவினை தாக்காதிருக்கவேண்டும். தாக்குமாயின் உச்சரிக்க முடியாது. 

   "சிவ" என்பது மங்களகரமானது என்பதாம்.

      சிவ என்பதை சிவா என்று நீட்டினால் அருவ சக்தியாகிய அம்பிகையைக் குறிக்கும்.  

    'சிவாய நம' என்னும் மந்திரமே பஞ்சாட்சரம்,பஞ்சாக்கரம்,திருவைந்தெழுத்து எனப்படுகிறது. 

   சிவவாக்கியர் தன் நூல் தொடங்கும் காப்புச் செய்யுளில் கூறும் மந்திரம் "நமசிவாய" என்பது "அரியதோர் நமசிவாயம் ஆதியந்தம் ஆனதும ஆறிரண்டுநூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்" என்றார்.

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் "நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே" என்று ஓர் அரிய திருப்பதிகத்தை அருளிச் செய்தார் .

    "சிவாய நம" என்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி" என்று நாவுக்கரசர் இறைவனைக் கேட்கிறார்.

  மாணிக்கவாசக ஸ்வாமிகள் தமது திருவாசகத்தில் "நமசிவாய வாழ்க" என்று தொடங்கியுள்ளார்.மேலும் "நானேயோ தவம் செய்தேன் சிவாய நம" எனப்பெற்றேன் என்கிறார்.

தொடரும் 

     








    








      


     

Sunday, January 10, 2010

NAMASIVAYA MANDHIRAM-2


 சிவ பெருமான்              

 நமசிவாய  மந்திரம்-2   
                  

           நமசிவாய பஞ்சாக்கர பதிகம் திருநாவுக்கரசர் அருளியது. சமணர்கள் திருநாவுக்கரசருக்கு பல கொடுமைகள் செய்தனர். அவரைப் பெரிய கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளிவிடுகிறார்கள். பஞ்சாக்கர பதிகம் பாடிய உடன் அவர்கள் கட்டுகள் அவிழ்ந்து கல்லும் தெப்பமாகி மிதக்கிறது. அவர் கரையேறுகிறார். அந்த இடம் கடலூருக்கு அருகில் "கரையேறிய குப்பம்" என்று இன்று விளங்குகிறது. இதிலிருந்து "நமசிவாய" மந்திரத்தின் பெருமைகளைப் புரிந்து கொள்ளலாம்.

   நமசிவாய என்பது பஞ்சாக்கரம் :

  'நம சிவாய' என்பது இறைவனின் திருவைந்தேழுதான தூல வடிவம். சிவாய நமஹா என்பது இறைவனின் நுட்பவடிவத்தை குறிக்கும். சிவாய என்பது அதிநுட்ப வடிவம். 

   இறைவனைப் பற்றிய ஐந்தெழ்து வேதத்திற்கு இருதயம் போன்றது. வேதங்களுள் யஜுர்வேதம் முக்கியமானது. அதற்க்குள் தைத்ரிய சம்ஹிதை ஏழு காண்டங்களுள் அதன் மததியமான பாகத்தில் நாலாவது காண்டம் நடுநாயகனாக மிக முக்கியமாக விளங்குகிறது. அதற்குள்ளும் மத்திய பாகமான ஐந்தாவது 'பிரச்னம்' முக்கியமானது. அதுதான் 'ஸ்ரீருத்ரம்' என்ற பகுதியாகும். அதற்குள்ளும் "நமசிவாய" என்ற பஞ்சாக்கரம் மததியில் உள்ளது. அதன்மத்தியில் 'சிவ' என்ற இரண்டு அட்சரம் அடங்கி உள்ளது.

தொடரும் 

     








    








               

Sunday, January 3, 2010

NAMASIVAYA MANDHIRAM-1


 சிவ பெருமான் 
  
                  நமசிவாய  மந்திரம்-௧

  "நமசிவாய" என்ற மந்திரம் ஓதினால் நமக்கு உயர்ந்த நிலை கிடைக்கும். நீண்ட காலமாக இருந்துவரும் மாயைகள் அஞ்சி நம்மை விட்டு விலகிவிடும். பரம்பொருளுடன் நாம் கலந்துவிடலாம் என்று சிவவாக்கியர் கூறுகிறார்.

    'உன்னை நான் மறந்தாலும் என்னுடைய நா 'நமசிவாய' என்ற நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும்' என்று சுந்தரர் கூறுகிறார்.
      ஆவியீர் ஐந்தை அபரத்தே வைதோதில் 
      ஆவியீர் ஐந்தை அகற்றலாம் - ஆவியீர் 
      ஐந்தறலாம் ஆவியீர் ஐந்துறலாம் ஆவியீர் 
      ஐந்திடலாம் ஓரிரண்டோ பாய்ந்து -   வள்ளலார்.

    கருத்து:
   தியான நிலையில் "சிவாய நமஹா"என்ற  மந்திரத்தை ஓதினால் ஐம்புலன்களையும் அடக்கலாம். ஆபத்துக்களையும், விபத்துகளையும் தவிர்க்கலாம். பத்துக் கலைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

தொடரும்.