AMAZON SHOP

Sunday, December 26, 2010

STHALA VARALARU- 10

            


  LORD SIVA
          




         ஸ்தல வரலாறு-10
        
   பரிவார தேவதைகளில் கற்பக விநாயகருக்கு அதிக அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வினாயகருக்கு மன்னர்கள்,பாண்டியதேவர் போன்றோர்களால் பூஜைக்கு செய்த தானங்கள் திருப்பணிகள் போன்றவை  கி.பி.       ம்  நூற்றாண்டில் இருந்து கி.பி. 15  , 16  நூற்றாண்டு வரை நிகழச்சிகள் யாவும் கற்பக விநாயகர் கோயில் நான்கு கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் அப்பிள்ளையார் பற்றிய பெருமை கூறும் பாடலும்  இடம் பெற்றுள்ளது.
       எனவே ஆன்மீக அன்பர்களே! 
    அதி புராதனமான காவிரி தென்கரை சிவதலமாம் கோயில்களில் சிறந்து விளங்கும் புண்ணிய தலமாம் ப்ரம்மா, விஷ்ணு,ருதிரன் மும்மூர்த்திகள் சேர்ந்து அருளும் தலமாம் 
      தன் குழவியாய் அரவணைக்கும் பக்தவத்சலேஸ்வரர் வசிக்கும் தலமாம் 
    இரு கற்பக கனிகளாம் கற்பக விநாயகர் மற்றும் கற்பகாம்பிகை அருளும் தலமாம் 
    சிறந்த சித்து விளையாட்டுகள் நடைபெற்ற அச்சித்தர்கள் வாழும் தலமாம் 
     அர்ஜுனனுக்கு ஞானக்கண் திறந்த துர்க்கை தேர்    தலமாம்  
   ஒன்பது கிரகங்களின் பரிகார நவகிரக திருத்தலமாம் 
        ச  சிறுகமணி விரைவீர்! 
       இறையருள் பெறுவீர்  !!!
       பேரின்பம் அடைவீர்  !!!!  
           திருச்சிற்றம்பலம் 
         முற்றும்.      
    












   













Sunday, December 19, 2010

STHALA VARALARU -9

          


LORD SIVA
 


   ஸ்தல வரலாறு-9

 தற்போது தேவஸ்தானம்,
பெட்டவைதலையில் அமைந்துள்ள அருள்மிகு மத்யார்ஜுநேஸ்வரர் திருக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும். மேற்கண்ட சிவன் கோவிலை கட்டி அவ்வூருக்கு இராஜேந்திர 
சோழன் பேட்டை என்று பெயரிட்டு, பலவிதமான தானங்களை வழங்கியுள்ள காரனத்தால் இக்கோயிலும் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதுதான் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.


   மேலும் இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் அமைந்துள்ள அம்பாள் 
 திரஊருவங்கள் மட்டுமே மேலிரு கரங்கள் தாமரை மலர்கள் அமைக்கப்பெற்றதாக 
உள்ளது என்பதை உற்றுநோக்குதற்குரியாது. ஆலமர் கடவுள், லிங்கோத்பவர்,விஷ்ணு துர்க்கை கல்லில் செதுக்கி 
 எடுக்கப்பட்ட அழகு வேலைப்பாடுகளுடன் கூடிய கல்,
ஜன்னல்,அதன் தோகை மையிலில் அமைந்துள்ள முருகப்பெருமான்,புடைப்பு சிற்பம்,அதற்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சிருதனி மேல்மண்டபம் ஆகியன சோழர் காலத்து கலை நுணுக்கங்களுக்கு எடுத்து காட்டுகளாக அமைந்துள்ளது.மேலும் தஷிணாமூர்த்தி சந்நிதி கோஷ்டதிற்கு
ஏற்ப வேலைப்பாடு உடைய சிறு முன் மண்டபம் 
அமைக்கப்பட்டிருப்பது  மிகச் சிறப்புடையதாக
கருதப்படுகிறது.

தொடரும்


                                                                 











                                                                                                        
                                     

Sunday, December 12, 2010

STHALA VARALAARU - 8

                                                                      சிவபெருமான்

   ஸ்தல வரலாறு-8

             அக்கல்வெட்டுகள் கூறும் செய்திகள்: இவ்வாலயத்தில் எட்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கி.பி. 11  ம் நூற்றாண்டை ஒட்டியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலாம் இராஜேந்தர சோழன் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில்களில்  இதுவும் ஒன்றாகும். இக்கிராமம் அக்கல்வெட்டு செய்திகளின் படி சிறிய 
வெண்மணி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே காலப்போக்கில் சிறுகமணி என்று உருக்குறை [லை]ந்துள்ளது.
       இவ்வூர் இராச கம்பீர வளநாட்டு சூரனூர் கூற்றத்தில் அமைந்திருந்ததாகவும் , மற்றோர் 
இடத்தில கங்கை கொண்ட சோழவளநாட்டு திரைமூர் 
நாட்டில் நாட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

     சோழர் காலத்தில் முழுமையாக கட்டப்பட்ட இக்கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துள்ளது. சில நூறு வருடங்களுக்கு
பின்பு சுமார் வருடங்களுக்கு பின்பு சுமார் கி.பி.
14  ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் சிவன் சன்னதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பல நூறு கல்வெட்டுக்கள் காலவெள்ளத்தால் அழிக்கப்பட்டு கிடைக்கபெறாத நிலையில் அரிதாக கிடைத்த சில கல்வெட்டுக்களை 
மட்டும் அங்கும் இங்குமாக வைத்து கட்டப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்டது போக எஞ்சிய கல்வெட்டுக்களே நாம் 
தற்போது காண்பதாகும். இக்கோயிலில் அமைந்துள்ள கற்பகவிநாயகர் 
சன்னதியில் காணப்படும் கி.பி. 12   ம் மற்றும் 15  ம் 
நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கற்பக விநாயகர் பெருமைகள் 
அப்பிள்ளையாருக்கு அமுது படிக்காகவும், திருநாமத்து காணிக்கையாகவும், அளிக்கப்பட்ட கொடைகள், திருப்பணிகள்,நிலங்கள்,அந்நிலங்களின் நான்கெல்லை விவரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

தொடரும்


                      
   









                                              

Sunday, December 5, 2010

STHALA VARALAARU - 7


                                              சிவபெருமான் 
  

         ஸ்தல வரலாறு-7

       அருள்மிகு பக்தவத்சலேஸ்வரர் சன்னதி,கர்பகிரகதிற்கு அடுத்து அர்த்த மண்டபம்,கீழ்மேலாக வடபுரமும்,தென்புறமும் இருமேடைகள் அமைக்கப்பெற்றுள்ளது. தெற்குமேடை ஒரு மேன்மையான ஞானி ஒருவர் சமாதி என்றும் அவர் கமணீய பிரனவநாதர் என்றும் கூறப்படுகிறது. பலவேளைகளில் பல ரூபங்களில் கண்டு களிதுள்ளதாக பல பெரியவர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். எனவே  கமணிய பிரனவநாதர் திருத்தலம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இவ்வாறு பல சித்து விளையாட்டுகளை கொண்ட  சித்தர் பெருமக்கள் உண்டு வாழ்ந்து , கண்டு களித்து , விண்டு உணர்ந்து உய்வித்த இடமே அருள்மிகு கற்பகாம்பிகை உடனமர் பக்தவத்சலேஸ்வரர் திருத்தலமாகும்.

   இத்திருக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் பெட்டவாய்த்தலை அருள்மிகு மத்யார்ஜுநேஸ்வரர் திருக்கோயில் நிர்வாக அலுவலர் நிர்வாகத்தின் கீழ் உள்ளதாகும். காலம்,பழமை, நாகரீகம் , ஆன்மிகம் ,செய்தி போன்றவற்றை காட்டும் காலக்கண்ணாடியாம் கல்வெட்டுக்கள் பல இத்திருக்கோயிலில் இருந்து  அழிந்து இருப்பினும் சில கல்வெட்டுக்கள் இன்று வரை நிலைத்து     நமக்கு ஆன்மீக செய்திகளை வெளிக்காட்டுவதாக உள்ளது. அவற்றுள் அருள்மிகு அருள்மிகு கற்பக விநாயகர் சன்னதியில் அமைந்துள்ள நான்கு கல்வெட்டுகளும் முக்கியமானதாக உள்ளது.

தொடரும்