![]() |
| LORD SIVA |
அக்கவேரி நதியில் தெற்கே அமைந்த பல சிவாலயங்களில் சிறுகமணி அ / மி கற்பகாம்பிகை உடனுறை பக்த வத்சலேஸ்வரர் சிவன்கோவில் மிகவும் பழமையானதாகும்.இத்திருக்கோயில் திருச்சி,கரூர் நெடுஞ்சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது. கணக்கில் அடங்கா வேத மந்திர, சாஸ்திர விற்பன்னர்களாம் பக்த சிரோன்மணிகள் வசித்து வந்த இடமாதலால் சிரோன்மணி என்றழைக்கப்பட்டு அதுவே சிறுகமணி என்று கூறப்படுகிறது.
நெல்,வாழை கரும்பு,தென்னை என எங்கும் பசுமை சூழ்ந்த அழகு மிளிரும் கிராமம் சிறுகமணி ஆகும்.
இத்திருக்கோயில் கி.பி. 11 ம் நூற்றாண்டு புராதனமாக அறியப்படுகிறது.கோயிலில் நுழைந்தவுடன் நலம் தரும் நந்தியம் பெருமான் நம்மை வரவேற்பதுபோல் காட்சி தருகிறார்.மூலவர் பக்தவத்சலேஸ்வரர் சுயம்புலிங்கம்.
அன்னை கற்பகாம்பிகை நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.நான்கு திருக்கரங்களை உடையவள்.மேலிரு கரங்களிலும் பத்மம் எனும் தாமரையை தாங்கியவராக உள்ளார்.கீழிரு கரங்களில் இடக்கரம் தன் பாதத்தை பற்றிக் கொள்ள காண்பித்தும், வலக்கரம் அபயமளிப்போம் வந்து சேர் என்பதாகவும் அமைந்துள்ளது.அம்பாள் பீட அமைப்பு சிற்ப கலை நுணுக்கங்களில் மிக தேர்ச்சி பெற்ற சிற்பிகளால் உருவாக்கப்பட்ட திருகுபீட அமைப்பாகும்.இவ்வமைப்பு அரிதிலும் அரிதாக உணரப்படுகிறது.
தொடரும்

