![]() |
| LORD SIVA |
ஸ்தல வரலாறு-10
பரிவார தேவதைகளில் கற்பக விநாயகருக்கு அதிக அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வினாயகருக்கு மன்னர்கள்,பாண்டியதேவர் போன்றோர்களால் பூஜைக்கு செய்த தானங்கள் திருப்பணிகள் போன்றவை கி.பி. ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 15 , 16 நூற்றாண்டு வரை நிகழச்சிகள் யாவும் கற்பக விநாயகர் கோயில் நான்கு கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் அப்பிள்ளையார் பற்றிய பெருமை கூறும் பாடலும் இடம் பெற்றுள்ளது.
எனவே ஆன்மீக அன்பர்களே!
அதி புராதனமான காவிரி தென்கரை சிவதலமாம் கோயில்களில் சிறந்து விளங்கும் புண்ணிய தலமாம் ப்ரம்மா, விஷ்ணு,ருதிரன் மும்மூர்த்திகள் சேர்ந்து அருளும் தலமாம்
தன் குழவியாய் அரவணைக்கும் பக்தவத்சலேஸ்வரர் வசிக்கும் தலமாம்
இரு கற்பக கனிகளாம் கற்பக விநாயகர் மற்றும் கற்பகாம்பிகை அருளும் தலமாம்
சிறந்த சித்து விளையாட்டுகள் நடைபெற்ற அச்சித்தர்கள் வாழும் தலமாம்
அர்ஜுனனுக்கு ஞானக்கண் திறந்த துர்க்கை தேர் தலமாம்
ஒன்பது கிரகங்களின் பரிகார நவகிரக திருத்தலமாம்
ச சிறுகமணி விரைவீர்!
இறையருள் பெறுவீர் !!!
பேரின்பம் அடைவீர் !!!!
திருச்சிற்றம்பலம்
முற்றும்.










