AMAZON SHOP

Tuesday, December 20, 2011

STHALA MAGIMAI-16



                                                             சிறுகமணி லிங்கம் 
                         

              இத்திருத்தலத்தில் இயற்றப்படும் முறையான  வழிபாடுகள் அனைத்தும் ஆயிரம் மடங்காக விருத்தியாகும் என்பதே இறைவன் நமக்கு உணர்விக்கும் பாடமாகும்.ஆனால் பக்தர்கள் அந்த வழிபாட்டுப் பலன்களைத் தம் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தாமல்,மற்றவர்களுக்காக,சமுதாய நலனுக்காகப் பயன்படுத்துவதே சிறப்பு என்பதே இந்திரன் சாப விமோசனம் பெற்ற நிகழ்ச்சி நமக்குப் புகட்டும் பாடமாகும்.


  முறையற்ற காமத்தால் அறிந்தோ,அறியாமலோ தவறு செய்தவர்கள் மனம் திருந்தி,தங்கள் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் பெற உதவும் அற்புதமான திருத்தலம் இதுவே.ஆனால் மீண்டும் அத்தகைய தவறுகளைச் செய்வதில்லை என்ற உறுதி பூண்டு வாழ்ந்தால்தான் பிராயச்சித்தம் முழுமை அடையும் என்பதை நினைவில் கொள்ளவும்.


     தற்காலத்தில் செல்போன்,கம்புட்டர்,தொலைகாட்சி போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் பார்வைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, உடல் மற்றும் மன பலவீனம் போன்ற துன்பங்கள் மக்களிடையே பெருகி வருகின்றன. இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்க வல்லவரே சிறுகமணி ஆயிரம் கண்ணுடைய மூர்த்தி ஆவார்.


தொடரும் 


  

Friday, November 25, 2011

STHALA MAGIMAI-15

                                 
                                                                             சிவ பெருமான்
     இந்திரன் எம்பெருமானைப் பணிந்து வணங்கி,"ஈசனே! அடியார்களின் நேசனே!அறியாமையால் தங்களிடம் ஆயிரம் ஊனக் கண்களை அபசாரம் செய்துவிட்டேன்.ஆனால் தாங்களோ பெரும் கருணை கூர்ந்து, அடியேனுக்கு அகக் கண்ணான ஞானக் கண்ணையே வழங்கி விட்டீர்கள். ஆயிரமாயிரம் ஊனக் கண்களைவிட, ஞானம் புகட்டும் ஒரு அகக் கண்ணே உயர்ந்தது என்ற அற்புதமான பாடத்தை இன்று எனக்குப் புகட்டி விட்டீர்கள். தங்கள் கருணைக்கு எல்லைதான் உண்டோ?" என்று மனம் விட்டுக் கதறி அழுதான்.


  ஆயிரம் கண்ணுடையார்! 

           இந்திரனுக்குச் சாப விமோசனம் அளித்து அவன் கண்களைத் தம் லிங்கத் திருமேனியில் ஏற்றதால்,சித்தர்கள் சிறுகமணி ஈசனை 'சகஸ்ராட்ஷா நாதர்' அதாவது 'ஆயிரம் கண்களை உடையவர்' என்று போற்றுகின்றார்கள்.
இதிருதல இறைவனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உரைவதை இன்றும் பக்தர்கள் தரிசித்து அனுக்ரகம் பெறலாம்.


தொடரும் 


   

Sunday, November 13, 2011

STHALA MAGIMAI-14


சிவ பெருமான்                                                    
                     பரிந்து காத்த பக்தவத்சலன்!


    தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் தவறுக்கு உரிய தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். இறைவனின் தண்டனையிலிருந்து எவருமே தப்ப முடியாது. இது இறைவனே விதித்த விதி. இந்த இயற்கை விதியிலிருந்து எவருக்குமே விலக்கு கிடையாது.இது இறைவனே விதித்த விதி. இந்த இயற்கை விதியிலிருந்து எவருக்குமே விலக்கு கிடையாது. அதனால் இந்திரன் உடலிலிருந்த கண்களையும், கரிய நிறத்தையும் வெண்மணி ஈசனே மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.


    ஓராயிரம் யுகங்கள் முடிவடைந்தவுடன் இந்திரன் பூரணமான சாப விமோசனத்தை பெற்றான்.அவன் உடலிலிருந்த கண்கள் அனைத்தையும் எம்பெருமானே ஏற்றுக்கொண்டார்.இறைவனின் எல்லையில்லாக் கருணையை உணர்ந்த இந்திரன் மனம் உருகி, ஆனந்தக் கண்ணீர் மல்க எம்பெருமானை நோக்கி, "பக்தவத்சலா! பக்தவத்சலா! பக்தவத்சலா! " என்று அழைத்துக் கூத்தாடினான்.அவ்வாறு இந்திரன் தன்னை வேண்டித் துதித்த நாமத்தையே, வெண்மணி ஈசன் அன்று முதல் தமக்குரிய திருப்பெயராய் அன்போடு ஏற்றுக் கொண்டார்.


  'பால்வண்ண நாதர்' எனப் பல யுகங்களாய்த் 
   திகழ்ந்த ஈசன், தற்போது 'பக்தவத்சலேஸ்வரர்'
   என்ற திருநாமம் தாங்கி, தன்னைத் தேடி வந்து 
   பணியும் பக்தர்களுக்குப் பரிவுடனே அருள் பாலிக்கின்றார்.இந்திரனுக்குச் சாப வோமோசனம் தந்த அந்த வெண்மணித் திருத்தலம் காலப்போக்கில் 'சிறுகமணி' எனப் மாறி,திருச்சி அருகே காவிரிக் கரையில் ஒரு சிற்றூராய் இன்று விளங்குகின்றது.


தொடரும் 


    

Wednesday, October 12, 2011

STHALA MAGIMAI-13


 சிவ பெருமான் 
                                                              
                 வெண்மணி வந்தடைந்தானே! 

   தாங்க முடியாத வெட்கமும் வேதனையும் அடைந்த இந்திரன் தக்க பரிகாரம் தேடி பூலோகம் வந்தான். பொன்னி நதி தீரத்தில் வெண்மணி என்ற திருத்தலத்தை அடைந்து,அங்கு குடிகொண்டிருந்த ஈசனைச் சரண் அடைந்தான்.அந்த ஈசனின் திருநாமமோ பால்வண்ண நாதர்,வெண்மணி ஈசன் என்பதாகும்.

    அக்காலத்தில் அதிருக்கொயிலைச் சுற்றி ஆவினங்கள் கூட்டமாக மேயும்.ஸ்ரிசிவபெருமானும் திறந்த வெளியில்தான் வீற்றிரின்தார். பசுக்கள் எல்லாம் அருணோதய வேளையில் வந்து,லிங்கத் திருமேனியில் தாங்களாகவே பாலைச் சொரிந்து விட்டுச் செல்லும். எம்பெருமானின் லிங்க வடிவமும் பால் வண்ண நிறத்தில் வெண்மையாக ஒளிரும். பால் சுரந்த திருமேனியில் காலைக் கதிரவனின் செங்கதிர்கள் பட்டு ஓளிரும் அக்காட்சியோ கயிலாயத்தை நேரில் தரிசிப்பது போல் கண்கொள்ளாக் காட்சியாக ஜொலிக்கும். 

    வெண்மணித் திருத்தலத்தில் இந்திரன் ஆயிரம் யுகங்கள் தொடர்ந்து தவம் இயற்றினான்.ஒவ்வொரு யுக முடிவிலும் அவன் உடலில் இருந்த ஒரு யோனிக் கண்ணை எம்பெருமான் தன்னுடைய லிங்கத் திருமேனியில் ஏற்றுக்கொண்டார். அதனால் அவருடைய உருவமும் சிறிது சிறிதாகக் கரிய நிறமாக மாறத் தொடங்கியது. மாறாக இந்திரன் படிப்படியாகத் தன்னுடைய சுய உருவத்தையும் தேவ ஒளியையும் மீண்டும் பெற ஆரம்பித்தான்.

 தொடரும் 

  

Saturday, September 24, 2011

STHALA MAGIMAI-12


                                                 சிவ பெருமான் 

      ஆசையே அழிவிற்கு காரணம்!

  எம்பெருமான் மீண்டும் எச்சரிக்கை செய்தார். "இந்திரா! உன்னுடைய தகுதிக்கு மீறிய ஆசையால் விளையப் போகும் விபரீதத்தை உணரும் நிலையில் நீ இல்லை. இருந்தாலும் உன்னுடைய விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுகின்றேன்." என்று அருளி மறைந்தார். இந்திரனும் தான் மேற்கொண்ட தவத்தால் ஒரு பெரிய காரியத்தை சாதித்து விட்ட பெருமிதத்தில் தேவலோகத்தை அடைந்தான்சித்தர்களுடைய கண்ணோட்டத்தில 'இறைவனை தரிசிக்க வேண்டும்' என்று நினைப்பது கூட சுயநலம் கலந்த எண்ணமே. மற்றவர்களுக்கு இறைவனின் தரிசனத்தை பெற்றுத் தரவேண்டும் என நினைப்பதே நியாயமான பொதுநல விருப்பம். எனவே, இந்திரனின் சுயநல ஆசையால் அவன் பெற்ற இறை தரிசனம் 'எது நல்லது? எது கெட்டது?' எனப் பகுத்தறியும் ஆற்றலை அவனுக்கு அளிக்கவில்லை. மாறாக அவனுடைய காம எண்ணத்தை பல மடங்காகப் பெருக்கி விட்டது. புண்ணிய சக்தி எதையும் பன்மடங்கு பெருக்கும் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதானே? 


   காம நோய் பெருகிய காரணத்தால் இந்திரனுக்கு  
 கௌதம ரிஷியின் பத்தினியான அகலிகை மீது தீராத மோகம் ஏற்பட்டது. அதனால் அவன் ரிஷியின் சாபத்திற்கு ஆளாக நேரிட்டது. இந்திரன்  
 பெற்ற வரத்தால் அவன் விருப்பபடியே அவனுக்கு ஆயிரம் கண்கள் இறைவனால் வழங்கப்பட்டன. ஆனால், சுயநலத்தால் இந்திரன் பீடிக்கப்பட்டதால் அகக் கண்களுக்கு பதிலாக ஆயிரம் யோனிக் கண்கள் எம்பெருமானால் அளிக்கப்பட்டன. இந்திரனுடைய உடலும் கரிய நிறமாக மாறி, அவன் தன்னுடைய தேவ ஒளியை இழந்தான்.


தொடரும் 



Thursday, June 30, 2011

STHALA MAGIMAI-11

  சிவ பெருமான் 

STHALA MAGIMAI-1


                                  ஆயிரம் கண் போதாதே !

     எம்பெருமான் புன்னகை புரிந்தார். ஏன் தெரியுமா? இந்திரன் கூறியது முற்றிலும் சரியே. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனை முழுமையாக தரிசனம் செய்வது எவராலும் இயலாத காரியம்.தேவர்களும்,யோகிகளும், மகான்களும்,சித்தர்களும் அவர்தம் திரஊருவத்தின் ஒரு அணு அளவு தர்சனத்தையே பெற்றுள்ளனர் என்றால் மற்றவர்களின் நிலையை என்னென்று கூறுவது?

     "இந்திரனே! இறைவனை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்ற உன்னுடைய எண்ணம் நல்ல எண்ணம்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால்,அதற்கான தகுதி உன்னிடம் இருக்கிறதா என்று முதலில் சிந்தித்து    பார்" 

        "என் மேனியில் பாதியைப் பெற்ற சக்தியும்,என் வழித் தோன்றல்களான கணபதியும், முருகனுமே என்னை முழுமையாக உணர்ந்து கொண்டது கிடையாது. அவ்வாறிரிருக்க ஒரு தேவ நிலையில் உள்ள நீ என்னை முழுமையாக தர்சிக்க வேண்டும் என்று பேராசை அல்லவா? தகுதிக்கு மீறிய ஆசை கொள்ளலாமா?" என வினவினார் ஈசன் .

    அதற்கு இந்திரனும் "ஐயனே,தங்களால் இயலாத காரியம் என ஒன்று உண்டா என்ன? விதியை விதித்தவரே தாங்கள்தான். தாங்கள் நினைத்தால் அந்த விதியை மாற்றி அமைக்கலாம் அல்லவா?எப்படியாவது அடியேனுடைய இந்தச் சிறிய ஆசையை தாங்கள் நிறைவேற்றியே ஆகா வேண்டும்". என்று மீண்டும் வேண்டினான்.

தொடரும் 

   





























Tuesday, June 14, 2011

STHALA MAGIMAI-10

  சிவ பெருமான் 
                          STHALA MAGIMAI-10       

         தரிசிக்க தயை புரிவீர்,ஐயா! 

    இந்திரனும்,"பரம்பொருளே! எல்லையில்லா அழகு வாய்ந்த தங்கள் திருஉருவை அடியேனுடைய இரு கண்களால் பார்க்க இயலவில்லை.தங்கள் திருவடியை நோக்கும் அதே சமயம் தங்கள் திருக்கரங்களை காண வேண்டும்.தங்கள் திருக்கரங்களைக் கண்ணுறும் அதே நேரத்தில்,தங்கள் திருமுகத்தைக் காண வேண்டும்" 

      "ஆனால்,தங்கள் திருப்பாதங்களில் இருந்து கண்களை விடுவித்து,தங்கள் முழங்காலிற்கு வருவதற்குள்ளாகவே 300 சதுர்யுகங்கள் கழிந்து விடுகின்றன.தங்கள் திருஉந்தியைக காண விழையும்போதோ 600 சதுர்யுகங்கள் கழிந்து விடுகின்றன. தங்கள் திருஉந்தியில் பதிந்த நேத்திரங்களை விடுவித்துத் தங்கள் திருமுகத்தைக் காண முயல்வதற்குள், அடியேனின் இந்திரப் பதவிக் காலமே முடிந்து விடும்போல் தோன்றுகிறதே!" 

    "இந்நிலையில் அடியேன் தங்கள் திருஉருவத்தை எப்படி முழுவதுமாக தரிசனம் செய்ய முடியும்? எனவே, தாங்கள் பெருங் கருணை கூர்ந்து, அடியவனுக்கு ஆயிரம் கண்கள் அருளினால், தங்கள் முழு உருவத்தையும் ஒருசேர தரிசிக்கும் பாகியாத்தைப் பெற்றவன் ஆவேன்" என்று மனமுருகி வேண்டினான்.

தொடரும் 


   
















    



















Sunday, June 5, 2011

STHALA MAGIMAI-9



 சிவ பெருமான் 
STHALA MAGIMAI-9

     அதாவது 'இந்த்ரிய சுகங்களை' வென்றவன். அல்லது 'இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்ட தேவ நிலையை அடைந்தவன். என்று பொருள்.ஆனால், இந்திரன், பிரம்மா முதலானோர் பல தவறுகளை செய்துவிட்டு, அதனால் பல சாபங்களை பெற்ற சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிட்\ருக்கிறோம்.

     இவைகளெல்லாம் தேவ நிலையில் உள்ளவர்களும் மனிதர்களின்  தவறுகளை  ஏற்றுக்கொண்டு, பல  
 துன்பங்களை மனித உடலில் அனுபவித்து, மனிதச் சமுதாயத்தை கரையேற்ற உதவும் வழிமுறைகளைக் காட்டிய நிலையே, இவற்றில் ஒன்றே இந்திரன் - அகலிகை சாப விமோசன நிகழ்ச்சி.அதை விரிவாக காண்போமா.

     மனிதனுடைய எல்லாவிதமான துன்பங்களுக்கு காரணம் ஆசையே. ஆனால், ஆசையை அறுத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.இந்தப் பாடத்தை மானுடர்களுக்கு  புகட்ட எம்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலே இந்திரன் சாப விமோசன லீலையாகும்.

      ஒரு யுகத்தில் தேவலோக அதிபதியாய் திகழ்ந்த இந்திரன் ஈசனை நோக்கி தவம் இயற்றினான்.அவனுடைய விருப்பம் 'எம்பெருமானைக் காண ஆயிரம் கண்கள் பெறவேண்டும்' என்பதே.பல யுகங்கள் தவத்திற்குப் பின் எம்பெருமானாம் ஈசன் அவன் முன்னே தோன்றி "இந்திரா! எதை நோக்கி இந்தக் கடும் தவத்தை நீ மேற்கொண்டுள்ளாய்? நீ விரும்பும் வரம் என்னவோ?" என்று வினவினார்.

 தொடரும் 





   
    

   
   





    















                        INDIAN TEMPLES AT A GLANCE
                 CLICK HERE

Tuesday, May 17, 2011

STHALA MAGIMAI-8


                           
                                                                  சிவ பெருமான்    

STHALA MAGIMAI-8


          'எள் நெய்' எனப் போற்றப்படும் நல்லெண்ணெய் தேய்த்து,வாரம் இருமுறை நீராடுவதால் கபால வாயு சீர் பெற்று,நம்முடைய எண்ணங்களில் தெளிவு ஏற்படுகிறது. இக்கரனதாலேயே நம் முன்னோர்கள் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து நீராடுவதலைத் தவறாது செய்து வந்தனர்.(செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும்,புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் நீராடுதல் நன்று) 

  ஆனால்,மின்சாரம்,மின்காந்த அலைகள் போன்றவை உள்சூடு இயக்கத்தைக் கொண்டிருப்பதால் செல்போன், டிவி,கம்ப்யூட்டர் மின்சாதனங்களை மனிதன் தொடர்ந்து கையாளும்போது அவை மனிதனின் உடல் நரம்புகளை எளிதில் பாழ்படுத்தி விடுகின்றன.அவற்றின் உபயோகத்தால் மூளையில் இயங்கும் கபால வாயு அளவுக்கு அதிகமாக உஷ்ணம் அடைவதால்,மனித உடலும், உள்ளமும் தங்கள் வலிமையை விரைவில் இழக்கின்றன.

   மேலும் கபால வாயு அளவுக்கு அதிகமாக உஷ்ணம் அடையும்போது தேவையற்ற காம எண்ணங்களும் அதிகரிக்கும். இத்தகைய பிரச்சினைகளால் மனித சமுதாயமும் அவதியுறும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த முன்னோர்கள் இப்பிரரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பல யுகங்களுக்கு முன்பே அருளியுள்ளனர்.

    இந்திரன் பெற்ற சாப விமோசனம் 

  இந்திரன் தேவ லோகத்தின் தலைவன். தேவேந்திரன், விஜயேந்திரன் என்பவை இந்திரனுக்கு விளங்கும் வேறு பெயர்கள்.

  தொடரும்
    






   










Wednesday, April 20, 2011

STHALA MAGIMAI-7


  சிவ பெருமான்              
                 ஸ்தல மகிமை-7

        தற்போது சமுதாயத்தில் விரைந்து பரவி வரும் இத்தகைய சீர்கேடுகளுக்குப் பிராயச்சித்தம் தர வல்லதே கமணீய சக்திகளாகும். சமுதாயத்தில் காமக் குற்றங்களும்,முறைகேடான பழக்க வழக்கங்களும் பெருகா வண்ணம் காக்க உறுதுணை புரிவதே கமணீய நாதக் கூறுகளாகும். எந்த அளவிற்குச் சமுதாயத்தில் கமணீய சக்திகள் பெருகுகின்றதோ, அந்த அளவிற்கு சமுதாயத்தில் காமக் குற்றங்கள் அகன்று,அமைதிப் பூங்காவாக மலரும் என்பதே சித்தர்கள் நமக்குக் காட்டும் நல்வழியாகும்.

                 மன வளம் பெரும் முறை 

   ஒரு மனிதனின் எதிர்காலம் அவன் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்துதானே அமைகின்றது? சரியான முடிவுகளை எடுக்கும்போது பிரகாசம் அடையும் அவனுடைய எதிர்காலம் தவறான முடிவுகளால் பாதிக்கப்படுகிறதே? அது ஏன்? 


     மனித மூளையில் இயங்கும், நடுச்சூடு வகையைச் சார்ந்த கபால வாயுவே ஒரு மனிதன் சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றது. நமது உள்ளங்கை,மருதாணி,சந்தனம்,எள் போன்ற மூலிகை வகைகள் நடுச் சூடு இயக்கத்தை கொண்டவை.இதனால் தான் சந்தனம் அரைத்தல், உள்ளங்கையில் மருதாணி இடுதல், எள் நீர் வார்த்து தர்ப்பணம் அளித்தல் போன்ற நற்காரியங்கள் நமது மூளைச் செல்களை ஆக்கப்படுத்தி, நமது எதிர்காலத்தை வளமாக்குகின்றன.


தொடரும் 


   


















   





















Sunday, February 6, 2011

STHALA MAGIMAI-6

 சிவ பெருமான் 
    ஸ்தல மகிமை-6 


   ஆனால் ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்ற செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட பானங்களை நாம் ஏற்கும்போது, இந்த பானங்களில் உள்ள 'வெளிச் சூடு' என்னும் தத்துவம் உடலில் உள்ள உள் சூட்டுடன் தொடர்பு கொள்வதால் விரைவில் உடல் உள் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடைந்து, இறுதியில் தங்கள் இயக்க சக்தியையே முழுவதுமாக இழந்து விடுகின்றன.

    அதேபோல,முறையான திருமணத்திற்குப் பின் தம்பதியரிடையே நிகழும் உறவு நிலையானது.அவர்களை நல்ல ஆரோக்கியமான உடல், மனவள நிலையில் வைத்திருப்பதுடன் அவர்களுக்குப் பிறக்கும் சந்ததிகளுக்கும் பரிபூரண ஆரோகியத்தைப் பெற்றுத் தருகிறது.

  ஆனால், சுய இன்பம்,ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவு நிலைகளில் மனிதர்கள் ஈடுபடும்போது, இந்த 'உள் சூடு - உள் சூடு' என்ற பரிமாற்றம் நிகழ்வதால், அவ்வாறு தகாத வழிச் செல்வோரின் உடல் உறுப்புகளும், நரம்புகளும், இரத்தக் குழாய்களும் விரைவில் பழுதடைந்துவிடுகின்றன. பல நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

தொடரும் 

    









    











Sunday, January 30, 2011

STHALA MAGIMAI-5


 சிவ பெருமான் 
  ஸ்தல மகிமை-5

     இருந்தபோதிலும் பீஜாட்சர சக்தியால் மனிதர்களுக்கு கிடைக்கும் பலனை விளக்குவது எளிதானதே.மனித உடலில் உள்ள சூட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதாவது, உல் சூடு, நடுச் சூடு,வெளிசூடு என்று மூன்று விதமான உஷ்ண நிலைகள் ஒவ்வொரு மனித உடல், மன இயக்கத்தைப் பரிபாலனம் செய்கின்றன.


  நாம் ஏற்கும் உணவு,நம்முடன் பழகும் மனிதர்கள் ,நம்மை ஆட்கொள்ளும் என்ன அலைகள் ஆகியவை நம் உடலில் உள்ள அந்தந்த வகை சூட்டுடன் பரிமாற்றம் அல்லது பரிவர்தனை செய்து செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. இந்த விதிக்கேற்ப நிகழச்சிகள் நடைபெறும்போது , நமது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு எதிரான பரிவர்தனை அல்லது தொடர்பு ஏற்படும்போது,பலவித நோய்கள் நம் உடலையும்,உள்ளத்தையும் நிச்சயம் தாக்கும்.


   உதாரணமாக,இளநீர் உள்சூடு சக்தியை உடையது. ஆகவே அதிகாலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்தினால், அது நமது உடலில் உள்ள உள்சூட்டுடன் தொடர்பு கொள்வதால் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து ,சிறுநீரகங்கள்,மலக்குடல் போன்ற உள்ளுறுப்புகள்  வலிமை பெறுகின்றன. இந்த உறுப்புகளில் உள்ள நரம்புகளும்,இரத்தக் குழாயகளும் தூய்மை அடைகின்றன.


தொடரும்