சிறுகமணி லிங்கம்
தற்காலத்து பெண்களும் மைத்ரேயி தேவியை போலவே பூணூல் அணிந்து, ஸ்ரீகற்பகாம்பிகை சன்னதி முன் அமர்ந்து ஸ்ரீகாய்திரீ மந்திரம் ஜபித்தால் நலம் தரும்.சமூக,குடும்ப,பாரம்பரியக் காரணங்களால் பூணூல் அணிய இயலாதவர்கள் இடுப்பில் அறைந்ஞான் கயிறு,மணிக்கட்டில் காசிக் கயிறு ,போன்ற காப்பு ரட்சைகளையாவது அவசியம் அணிதல் வேண்டும்.
சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை பெண்கள் விரல் நுனிகளால் தொட்டுக் கொண்டு கீழ்கண்ட துதியை ஓதுதல் நலம் தரும்.
ஹரித்ரா குங்கும தேவ்யை நமஹா
ஹரித்ரா குன்குமாயை நமஹா
யத் பூஜிதம் மாயா தேவி பரிபூரணம் ததாச்துதே
அனையா பூஜையா ஸ்ரிஹரித்ரா குங்கும தேவி பரியாதாம்
யாதேவி சர்வபூதேஷு ஹரித்ரா குங்கும
ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமோ நமஹா
இவ்வாறு தொடர்ந்துஒன்பது வியாழக்கிழமைகளில் ஸ்ரிகற்பகாம்பிகையை வழிபட்டுவந்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.என்பது தர்மத்வஜாய ரிஷியின் புதல்வியான துளசி தேவி பெற்றுத் தந்த வரம்.இத்துடன் ஸ்ரிக்ரிஷ்ணர் அருளிய தர்மத்வஜாய துதியையும் ஓதுவது சிறப்பு. இவ்வாறு தொடர்ந்து 48 வியாழக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் பெண்கள் தங்கள் பெயருக்கு உரிய பீஜாட்சர சக்திகளையே அறியும் அளவிற்கு ஞானத்தை பெறுவர். (இந்த வழிபாட்டில் பொதிந்துள்ள பல அற்புத இரகசியங்களை தக்க குருநாதர் மூலம் தெரிந்துகொள்ளவும்.)
தொடரும்
No comments:
Post a Comment